மின்னம்பலம் மின்னம்பலம்
ஞாயிறு, 17 ஜன 2021

சிபிராஜூக்கு உதவும் வேட்டை சகோதரர்கள்.. கபடதாரி டிரெய்லர்!

சிபிராஜூக்கு உதவும் வேட்டை சகோதரர்கள்.. கபடதாரி டிரெய்லர்!

கன்னட மொழியில் வெளியான காவலுதாரி படத்தின் அதிகாரப்பூர்வமான தமிழ் ரீமேக் தான் கபடதாரி. இந்தப் படத்தின் டிரெய்லர் தற்பொழுது வெளியாகியுள்ளது.

சிபிராஜ் நடிப்பில் பிரதீப் கிருஷ்ணமூர்த்தி இயக்கத்தில் கபடதாரி படம் தயாராகிவருகிறது. 2017-ல் சிபிராஜ் நடித்த சத்யா படத்துக்குப் பிறகு, மீண்டும் பிரதீப் இயக்கத்தில் இந்தப் படத்தில் சிபிராஜ் நடித்திருக்கிறார். சஸ்பென்ஸ் த்ரில்லராக உருவாகியிருக்கும் இப்படத்தில் நாசர், ஜெயபிரகாஷ், மயில்சாமி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

டிராஃபிக் போலீஸான ஹீரோ, ஒரு க்ரைம் கேஸை மீண்டும் ஓபன் செய்து அதைக் கண்டுபிடிப்பதே படத்தின் ஒன்லைன். கன்னடத்தில் வெளியாகி பெரிய ஹிட்டானது ஒரிஜினல் வெர்ஷனான காவலுதாரி. அதே ஸ்டைலில் அப்படியே தமிழில் உருவாக்கியிருக்கிறார்கள் என்பதை டிரெய்லர் பார்க்கும் போதே புரிந்துகொள்ள முடிகிறது.

சிபிராஜூக்காக இப்படத்தின் டிரெய்லரை வேட்டை சகோதரர்களான மாதவனும், ஆர்யாவும் இணைந்து வெளியிட்டிருக்கிறார்கள். லிங்குசாமி இயக்கத்தில் மாதவனும், ஆர்யாவும் இணைந்து நடித்த வேட்டை செம ஹிட். 2012ஆம் ஆண்டு இதுமாதிரியான பொங்கல் நாளில் தான் வெளியானது குறிப்பிடத்தக்கது. தற்பொழுது கபடதாரி படத்திற்கான இருவரும் இணைந்திருக்கிறார்கள். ஆக, கபடதாரி திரைப்படம் வருகிற ஜனவரி 26ஆம் தேதி வெளியாக இருக்கிறது.

https://www.youtube.com/watch?v=lPLhnLqbzb8

புதன், 13 ஜன 2021

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon