மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, சனி, 28 நவ 2020

கிச்சன் கீர்த்தனா: மிளகு அடை

கிச்சன் கீர்த்தனா: மிளகு அடை

இந்த கொரோனா காலத்துடன் மழைக்காலமும் தொடங்கி விட்டது. இந்த நேரத்தில் நோய்களால் ஏற்படும் தொற்றுகள் அதிகமாகப் பரவும். எனவே வெளி உணவுகளைச் சுவைப்பதை அறவே தவிர்க்க வேண்டும். மேலும் சாதாரண சளி மற்றும் காய்ச்சலுக்கு இடம்கொடுக்காமல் இருக்கும் உணவுகளைச் சாப்பிட வேண்டும். அதற்கு வீட்டிலேயே செய்யக்கூடிய இந்த மிளகு அடை சிறந்தது.

என்ன தேவை?

பச்சரிசி - ஒரு கப்

துவரம்பருப்பு, கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு - தலா கால் கப்

மிளகு - ஒரு டீஸ்பூன்

நறுக்கிய கறிவேப்பிலை - சிறிதளவு

தேங்காய்த் துருவல் - 2 டேபிள்ஸ்பூன்

பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை

எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

எப்படிச் செய்வது?

பச்சரிசியுடன் துவரம்பருப்பு, கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு சேர்த்துக் கழுவி ஒரு மணி நேரம் ஊறவைக்கவும். பிறகு களைந்து மிளகு, உப்பு சேர்த்து மிக்ஸியில் போட்டு, சிறிதளவு தண்ணீர் விட்டு கொரகொரப்பாக அரைத்து எடுக்கவும். மாவுடன் தேங்காய்த் துருவல், பெருங்காயத்தூள், கறிவேப்பிலை சேர்த்துக் கலக்கவும். தோசைக்கல்லைக் காயவைத்து மாவைச் சிறிய அடைகளாகத் தட்டி, எண்ணெய்விட்டுச் சுட்டெடுக்கவும்.

வெள்ளி, 20 நவ 2020

chevronLeft iconமுந்தையது