மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 18 அக் 2020

கிச்சன் கீர்த்தனா: சண்டே ஸ்பெஷல் - சுண்டலும் சுவையும்!

கிச்சன் கீர்த்தனா: சண்டே ஸ்பெஷல் - சுண்டலும் சுவையும்!

பண்டிகைகளின் பாரம்பர்யம் மாறாமல் பிரசாதங்களைச் செய்து ஆண்டவனுக்குப் படைக்கும்போது அதில் எழும் சந்தேகங்கள் அநேகம். இந்த நவராத்திரி நாட்களில் சுண்டல் செய்து பரிமாறும்போது ஏற்படும் சந்தேகங்களுக்குச் சில தீர்வுகளும் உள்ளன.

நவராத்திரியில் செய்யப்படும் கார சுண்டல்களின் சுவையை மேலும் கூட்டுவது எப்படி?

பட்டாணி, கொண்டைக்கடலை, மொச்சை, ராஜ்மா போன்றவற்றை வேகவைத்து தாளிக்கும்போது காய்ந்த மிளகாய் பாதியளவு, பச்சை மிளகாய் பாதியளவு சேர்த்துத் தாளிக்க வேண்டும். தனியா, எள் சிறிதளவு, தேங்காய்த்துருவல், கறிவேப்பிலை சிறிதளவு... இந்த நான்கையும் ஒரு டீஸ்பூன் எண்ணெயில் வறுத்து மிக்ஸியில் கொரகொரப்பாகப் பொடித்துத் தூவ வேண்டும். கார சுண்டல்கள் மிகவும் மணமாகவும் சுவையாகவும் இருக்கும்.

சுண்டல்கள் செய்து, படைத்து முடித்ததும் கொலு பார்க்க வருபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துவிட்டால், அவர்களுக்குக் கொடுக்கும் சுண்டலின் அளவை எப்படி அதிகரிப்பது?

கார சுண்டல்கள்...

வாணலியில் இரண்டு டீஸ்பூன் எண்ணெய்விட்டு நறுக்கிய பச்சை மிளகாய், கேரட் துருவல், நறுக்கிய தக்காளி சேர்த்து வதக்கவும். தயாரித்து வைத்துள்ள சுண்டலைப் போட்டு ஒருமுறை புரட்டி, சிறிதளவு உப்பு சேர்த்து, அரிசிப் பொரியைக் கலந்து அடுப்பை அணைத்து விடவும். சுண்டலின் அளவு அதிகமாகி விடும் (கடலைகளை ஊறவைக்கவோ, வேகவிடவோ நேரமிருக்காது).

இனிப்பு சுண்டல்கள்...

காராமணி, முழுப்பயறு போன்றவற்றில் இனிப்பு சுண்டல்கள் செய்திருந்தால் வெறும் வாணலியில் அவலை வறுத்து மிக்ஸியில் ஒன்றிரண்டாகப் பொடிக்கவும். 2 டேபிள்ஸ்பூன் நெய்யில் தேங்காய்த் துருவலை வதக்கி அத்துடன் தேவையான அளவு துருவிய வெல்லம் சேர்த்து வறுத்துப் பொடித்த அவலையும் சேர்த்து நாம் தயாரித்துவைத்துள்ள இனிப்புச் சுண்டலையும் சேர்த்து ஒருமுறை புரட்டி எடுக்கவும். அடுப்பை அணைத்து எல்லாவற்றையும் நன்றாகக் கலந்துவிடவும். சுண்டலின் அளவு அதிகரித்துவிடும்.

சுண்டலில் உப்பு அதிகமானால் என்ன செய்வது?

ஒரே பயறில் செய்யப்படும் சாதாரண வகை சுண்டல் என்றால் தேங்காய்த் துருவல், கேரட் துருவல் சேர்க்கலாம். காய்கறி கலவைச் சுண்டல் என்றால் வெங்காயத்தைப் பொடியாக நறுக்கி அதில் சிறிதளவு எலுமிச்சைச்சாறு பிழிந்து கலந்து சுண்டலில் சேர்க்கலாம். உப்பின் சுவை குறையும்.

கர்நாடக நீர் வரத்து: உயரும் மேட்டூர் அணையின் நீர் மட்டம்!

3 நிமிட வாசிப்பு

கர்நாடக நீர் வரத்து: உயரும் மேட்டூர் அணையின் நீர் மட்டம்!

துப்பாக்கியுடன் செல்ஃபி: குண்டு பாய்ந்து பலியான சோகம்!

3 நிமிட வாசிப்பு

துப்பாக்கியுடன் செல்ஃபி: குண்டு பாய்ந்து பலியான சோகம்!

வேலைவாய்ப்பு: Indbank-ல் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: Indbank-ல் பணி!

ஞாயிறு 18 அக் 2020