மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, ஞாயிறு, 9 ஆக 2020

தாழம்பூர் கொடுக்கும் புது வாழ்வின் தொடக்கம்!

 தாழம்பூர் கொடுக்கும் புது வாழ்வின் தொடக்கம்!

விளம்பரம்

பணத்துக்கு முக்கியத்துவம் கொடுக்காமல், மருத்துவமனைக்குள் நுழையும் நோயாளியின் உடல்நலனில் அக்கறை கொள்ளவேண்டும் என்பது ஒரு மருத்துவமனைக்குச் செல்பவரின் குறைந்தபட்ச எதிர்பார்ப்பாக இருக்கும். தாழம்பூரில் உள்ள ஸ்ரீ ஐசரி வேலன் மிஷன் ஹாஸ்பிடலுக்குச் செல்பவர்களுக்கு மேற்கண்ட வகையிலான வரவேற்பு மட்டும் தான் கிடைக்கும். காரணம், எந்த நோயுடன் அனுமதிக்கப்பட்டாலும், அங்கு தங்கி சிகிச்சை பெற்றுக்கொள்ளும் நோயாளிகளுக்கு முற்றிலும் இலவசமான மருத்துவ சேவையை வழங்கிவருகிறது வேல்ஸ் குழுமத்தின் ஒரு பகுதியாக செயல்படும் ஸ்ரீ ஐசரி வேலன் மிஷன் ஹாஸ்பிடல்.

புற்றுநோய் பாதிக்கப்பட்டயாராக இருப்பினும் உடனடியாக அனுமதிக்கப்பட்டு சிகிச்சையளிக்கப்படவேண்டும் என்பதை கொள்கையாகவே கொண்டு செயல்படுகிறது இந்த மருத்துவமனை. முதியவர்களின் உடலுக்கு ஏற்படும் பிரச்சினைகள் அத்தனைக்கும் தேவையான மருத்துவ வசதிகள் மற்றும் மருந்துகளை இலவசமாகவே செய்துகொடுக்கின்றனர்.

இயற்கையான பசுமை நிறைந்த மரங்கள் சூழ்ந்த ஸ்ரீ ஐசரி வேலன் மிஷன் மருத்துவமனையில் நூறு படுக்கைகளுக்கும் மேலாக இருக்கின்றன. எந்த படுக்கையும் எந்த காலத்திலும் நோயாளிகள் இன்றி இருந்ததுமில்லை; ஒரே நோயாளியை பல நாட்களுக்கு மேலாக இருக்கச் செய்யாமல் குணமளித்து அனுப்புகின்றனர் . இதற்குக் காரணம் மருத்துவ உதவிகளை மட்டும் ஸ்ரீ ஐசரி வேலன் மிஷன் மருத்துவமனை கொடுக்கவில்லை. பெரும்பாலும் ஊட்டச்சத்து குறைபாட்டினாலேயே எல்லா நோய்களும் ஏற்படுவதால், நோய் பாதிப்பினால் அனுமதிக்கப்படும் நோயாளிகளை பரிசோதித்து, அவர்களை அங்கேயே தங்க வைக்கின்றனர்.

குறைபாடுள்ள ஊட்டச்சத்து கண்டுபிடிக்கப்பட்டு, அந்த ஊட்டச்சத்தினை உடம்பில் ஏற்ற தேவையான உணவு வழங்கப்படுகிறது. நோயினை எதிர்த்துப் போராட உடலுக்கு வலிமையைக் கொடுக்கும் உணவினையும், அந்த உணவு வேலை செய்யும் விதத்தில் மருந்தினையும் சேர்த்துக் கொடுக்கும்போது எந்த நோயுடன் வந்தாலும், சில மாதங்களிலேயே முழு போஷாக்குடன் கிழக்குக் கடற்கரை சாலையில் அமைந்துள்ள தாழம்பூர் ஸ்ரீ ஐசரி வேலன் மிஷன் மருத்துவமனையிலிருந்து வீடுகளுக்குக் கிளம்பிச் செல்கின்றனர் மக்கள். இத்தனை பெரிய காரியத்தை, அமரர் டாக்டர் திரு. ஐசரி வேலன் அவர்களது ஆசைப்படி அவரது மகன் ஐசரி.கே.கணேசன் செய்துவருகிறார். வேல்ஸ் குழுமத்தின் இந்த செயலால் ஒவ்வொரு வருடமும் பல நூறு நோயாளிகள் குணப்படுத்தப்பட்டு புது வாழ்வினை நோக்கிய பயணத்தைத் தொடங்குகின்றனர்.

விளம்பர பகுதி

சனி, 1 ஆக 2020

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon