மின்னம்பலம் மின்னம்பலம்
ஞாயிறு, 25 அக் 2020

ரேலா மருத்துவ மையம்: ஒரு மாதக் குழந்தைக்கு கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை!

 ரேலா  மருத்துவ மையம்: ஒரு மாதக் குழந்தைக்கு கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை!

விளம்பரம்

சென்னை குரோம்பேட்டையில் அமைந்திருக்கும் டாக்டர் ரேலா மருத்துவ மைய நிலையத்தின் சாதனைகளை சொல்லிக்கொண்டே போகலாம். மருத்துவ வசதி இல்லாமையால் இந்தப் பூமிப் பந்தில் ஓர் உயிர் கூட போய்விடக் கூடாது என்பதுதான் டாக்டர் ரேலா மருத்துவ மைய நிலையத்தின் தாரக மந்திரம்.

2019 செப்டம்பர் 10 ஆம் தேதி டாக்டர் ரேலா சென்னையில் ஒரு பத்திரிகையாளர் சந்திப்பை நடத்துகிறார். இந்திய மருத்துவ சரித்திரத்தின் மிக முக்கியமான நாள் அது.

பிறந்து ஒரு மாதமே ஆன பச்சிளம் சிசுவுக்கு கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக செய்து முடித்த நற்செய்தியை அந்த சந்திப்பில் அறிவிக்கிறார் டாக்டர் ரேலா. பக்கத்தில் அந்த கைக் குழந்தையோடு ஆனந்தக் கண்ணீரில் மிதந்துகொண்டிருக்கிறார்கள் அந்தக் குழந்தையின் பெற்றோர்.

மும்பையைச் சேர்ந்த அந்த குழந்தை ஓரிரு மாதங்கள் முன்பு பிறந்தது. கொஞ்ச நாளிலேயே தாய்ப்பால் கூட குடிக்க முடியவில்லை. தாய்ப்பால் குடித்தால் உடனடியாக அது விஷமாக மாறிவிடும். பிறக்கும் குழந்தைகளில் மூவாயிரம் குழந்தைகளில் ஒன்று இதுபோன்ற வளர்சிதை மாற்றக் கோளாறுகளுடன் பிறக்கிறது. இதுபற்றி அறியாத பெற்றோர்கள், ஓரிரு மாதங்களிலேயே குழந்தை வாந்தி எடுத்து இறந்துவிட்டது என்று கதறுகிறார்கள்.

இந்த மும்பைக் குழந்தையின் தகப்பனார் சென்னையிலிருக்கும் டாக்டர் ரேலா மருத்துவ மைய நிலையம் பற்றித் தகவல் அறிந்து குழந்தையைக் கொண்டு வந்து சேர்த்துள்ளார். இந்தியாவிலேயே ஒரு மாத குழந்தைக்கு முதன் முறையாக கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சையினை வெற்றிகரமாக டாக்டர் ரேலா தலைமையிலான குழுவினர் செய்து முடித்திருக்கிறார்கள்.

கடந்த ஜூலை மாதம் டாக்டர் ரேலா இன்ஸ்டிடியூட் & மெடிக்கல் சென்டரில் ஒரு மாத குழந்தைக்கு இந்தியாவின் முதல் வெற்றிகரமான கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. நாட்டில் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்ட மிக இளைய குழந்தை இப்போது சிறப்பாக இருக்கிறது. 10 மணிநேர நீண்ட அறுவை சிகிச்சையை குழந்தை மாற்று அறுவை சிகிச்சை நிபுணர்கள் மற்றும் குழந்தை மயக்க மருந்து நிபுணர்களின் நிபுணர் குழு மேற்கொண்டது.

இந்தியா என்ன உலகம் முழுதும் டாக்டர் ரேலா மருத்துவ மைய நிலையத்தின் புகழ் இந்த அறுவை சிகிச்சையால் உயர்ந்திருக்கிறது. அந்தக் குழந்தையின் தாயாருடைய மனமார்ந்த வாழ்த்துகள் டாக்டர் ரேலா மருத்துவ மைய நிலையத்துக்குக் கிடைத்திருக்கிறது.

(இன்னும் காண்போம் சிறப்புகளை)

விளம்பர பகுதி

சனி, 1 ஆக 2020

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon