மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, ஞாயிறு, 9 ஆக 2020

கிச்சன் கீர்த்தனா: முட்டைப் பணியாரம்

கிச்சன் கீர்த்தனா: முட்டைப் பணியாரம்

பொதுவாக 44 - 50 கிராம் எடையுள்ள முட்டையில் 70 கிலோ கலோரிகள் எரிசக்தியும் (Energy), 6 கிராம் புரோட்டீனும் இருக்கும். அதனால்தான் இதனை உலகின் மிகச் சிறந்த உணவு வகைகளில் ஒன்றாகச் சொல்கிறார்கள். தினம் தினம் ஆம்லெட், அவியல் என்று இல்லாமல் முட்டைப் பணியாரமும் செய்து அசத்துங்கள்.

என்ன தேவை?

முட்டை - 2

பெரிய வெங்காயம் - ஒன்று (பொடியாக நறுக்கவும்)

பச்சைமிளகாய் - 2 (பொடியாக நறுக்கவும்)

கறிவேப்பிலை, கொத்தமல்லித்தழை - சிறிதளவு (பொடியாக நறுக்கவும்)

மஞ்சள்தூள் - ஒரு டீஸ்பூன்

உப்பு - தேவையான அளவு

இட்லி மாவு - 2 கரண்டி

எண்ணெய் - தேவையான அளவு

கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு - ஒரு டீஸ்பூன்

எப்படிச் செய்வது?

ஒரு பவுலில் இட்லி மாவுடன் உடைத்த முட்டை, பெரிய வெங்காயம், மஞ்சள்தூள், பச்சைமிளகாய், கறிவேப்பிலை, கொத்தமல்லித்தழை, உப்பு சேர்த்து நன்கு அடித்துக் கொள்ளவும். அடுப்பில் வாணலியை வைத்து கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு சேர்த்துத் தாளித்து இட்லி மாவில் சேர்த்துக் கலக்கவும். பணியாரக்கல்லை அடுப்பில் வைத்து குழிகளில் கால்வாசி அளவுக்கு எண்ணெய் ஊற்றி சூடாக்கவும். இனி, கலந்து வைத்துள்ள இட்லி முட்டை மாவுக் கலவையை ஒவ்வொரு பணியாரக் குழியிலும் ஊற்றி வேகவிடவும். வெந்ததும் ஒரு குச்சியால் பணியாரத்தைத் திருப்பிவிட்டு மறுபக்கமும் வேகவைத்து சூடாக எடுத்துப் பரிமாறவும்.

நேற்றைய ரெசிப்பி: முட்டை பெப்பர் வறுவல்

வெள்ளி, 31 ஜூலை 2020

chevronLeft iconமுந்தையது