மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, ஞாயிறு, 29 நவ 2020

கடற்கரை காற்றும் KEH பால்ம் கவுண்டியின் கனவு வீடும்!

 கடற்கரை காற்றும் KEH பால்ம் கவுண்டியின் கனவு வீடும்!

விளம்பரம்

24 மணி நேரமும் போக்குவரத்து நெரிசல், புகை, தூசு என மாசுபட்ட காற்று, வாகனங்களின் ஓயாத இரைச்சல், ஓடிக்கொண்டே இருக்கும் மனிதர்கள், எந்திரத்தனமான மனிதர்கள் என்று எப்போதும் பரபரப்பாக இயங்கும் சென்னையில், ஒரு பிரபலமான நிறுவனத்தில் உயர்ந்த பொறுப்பில் இருக்கிறார் ராம். அவருடைய முழுபெயர் ராமகிருஷ்ணமூர்த்தி. தமிழகத்தின் தென்மாவட்டத்தில் ஒரு உள்ளடங்கிய கிராமத்தில் பிறந்து சென்னைக்கு வந்து தனது உழைப்பால் ஒரு நல்ல நிலையை அடைந்துள்ளார். சென்னைக்கு வந்து சில தசாப்தங்களைக் கடந்துவிட்டாலும் அவருக்குள் அந்த கிராமத்து மனிதன் இன்னும் அப்படியேதான் இருக்கிறார். நிறுவனத்தின் வேலைப்பளு எல்லாம் அவருக்கு ஒரு பிரச்சனையே அல்ல. ஆனால்,மூச்சுத்திணற வைக்கும் வாகன நெரிசல், இரைச்சல், தூசு, புகை, புழுக்கம், நேரமில்லாமல் ஓடிக்கொண்டிருக்கும் மனிதர்கள் இவர்களிடமிருந்து ஒரு நாளைக்கு சில மணிநேரங்களாவது தப்பித்துவிட வேண்டும் என்பதுதான்.

தனது கிராமத்தைப் போலவே சென்னைக்குள்ளே இயற்கையான சூழலில், தூய்மையான காற்று, அருகில் தூய்மையான கடற்கரை, சுற்றிலும் தென்னை, மா, வாழை என மரங்கள், சூரியன் உதிப்பதையும் நிலவின் பொன்னொளியையும் ரசிப்பதற்கு ஏற்ற அமைவிடம் என்று ஒரு வீடு வாங்கிவிட வேண்டும் என்பதுதான் ராமின் நெடுநாள் கனவு. இப்படியான ஒரு புது வீட்டை ராம் கடந்த பத்தாண்டுகளாக தேடி வருகிறார். நிச்சயமாக அவரின் தேடலை பாராட்டித்தான் ஆக வேண்டும். ராமின் இத்தனை ஆண்டுகளின் தேடலுக்கு பலன் கிடைக்காமல் போகவில்லை. ஒரு நாள் தனது காரில் கிழக்கு கடற்கரை சாலையில் போய்க்கொண்டிருந்தவர் ஒரு மின்னல் அடித்ததைப்போல ஒரு கனம் அப்படியே நின்றுவிட்டார். இயற்கைச் சூழலில் மரங்கள் சூழ, ஒரு ரம்மியமான ஓவியக் காட்சியை திரைச்சீலையில் தீட்டியதைப்போல பால்ம் கவுண்ட்டி வீடுகள் அவர் முன்னால் நின்றுகொண்டிருந்தன. பார்த்தவுடனேயே முடிவு பண்ணிவிட்டார். தனது கிராமத்தின் சுகந்தத்தை இப்படி நவீனமாக கலைநயத்துடன் நேர்த்தியாகக் கட்டியது யார் என்று அதிசயித்துப் போனார்.

கிழக்கு கடற்கரை சாலையில் உத்தண்டியில் கே.இ.எச். நிறுவனத்தின் பால்ம் கவுண்ட்டி வீடுகள், தனித்தனி வீடுகளாக 22 வில்லாக்கள் கட்டப்பட்டுள்ளன. ஒவ்வொரு வில்லாக்களுக்கும் ஒரு தனி பெயர் பால்ம் ரோஸ், பால்ம் லோட்டஸ், பால்ம் லில்லி, பால்ம் டுலிப், இப்படி அழகழகான வீட்டின் பெயர்கள். வீடுகளைச் சுற்றி தென்னை மரம், பசுமையான தோட்டம், ஒவ்வொரு வீட்டுக்கும் அந்த வீட்டு போர்டிகோவிலேயே கார் பார்க்கிங், பால் கனியில் நின்றுபார்த்தால் வானத்தையே மனதுக்குள் வரித்துக்கொள்ளலாம். சூரியோதயத்தையும் பால் நிலவின் பொன்னொளியையும் கண்டு ரசிக்க தடையற்ற அமைவிடத்தில் பால்கனி. உறுதியான கட்டிடம், கண்கவரும் வண்ணத்தில் வழுவழுப்பாக வண்ணப்பூச்சு செய்யப்பட்ட சுவர்கள். விசாலமான ஹால், விசாலமான படுக்கை அறை, நவீனமான சமையலறை என்று மிகவும் பிரம்மாண்டமாக இருப்பதைப் பார்த்த ராம் தன்னுடைய கனவு வீட்டை அடைந்துவிட்டதாக நிம்மதியடைந்தார்.

தென் கோடியில் இருக்கும் தனது கிராமம் அதன் இயற்கை எழில் மாறாமல், எல்லா வசதிகளோடும் நவீனமாகியிருந்தால் எப்படியிருக்குமோ அப்படி இருக்கிறது உத்தண்டியின் உள்ள கே.இ.எச்.-ன் பால்ம் கவுண்ட்டி வீடுகள் என்று ராம் பெருமை பேசுகிறார். நாம் நினைத்த மாதிரி வீடு அமைந்துவிட்டால் மட்டும் போதுமா? பிள்ளைகளின் படிப்புக்கு வசதியாக அருகாமையில் கல்வி நிறுவனங்கள் இருக்க வேண்டுமே என்று யோசித்தால் அதுவும் குறையில்லை. பால்ம் வீடுகளுக்கு அருகாமையிலேயே கடல்சார் பல்கலைக்கழகமும், அமெட் பல்கலைக்கழகமும் உள்ளது. விடுமுறை நாட்களை ஜாலியாக கழிக்க மிக அருகிலேயே மாயாஜால், ஷாப்பிங் செய்ய மால்கள், சுவையான உணவுக்கு ரெஸ்டாரண்ட்டுகள், கிளப்புகள் என எல்லா வசதிகளும் பக்கத்திலேயே உள்ளன. அதைவிட மிக அருகாமையில், பிரத்தியங்கரா , சாயிபாபா கோயில், சிறிது தொலைவில் புத்தர் கோயில் அமைந்துள்ளன. சென்னை மாநகரின் மையத்துக்குள் போய்வர வேண்டுமென்றால் உங்கள் காருக்கு டோல் கட்டணம் செலுத்த தேவையில்லை. ஏனென்றால், இந்த பால்ம் கவுண்ட்டி வீடுகள் உத்தண்டி டோல் கேட்டுக்கு முன்பாகவே உள்ளது. 5 கி.மீ. தொலைவுக்குள்ளாகவே அக்கரை, சோழிங்கநல்லூர் சந்திப்புகள். இப்படி ஏகப்பட்ட வசதிகளோடு இருந்ததால் ராம் தனது கனவு வீட்டை வாங்குவதில் இரட்டிப்பு சந்தோஷத்துடன் துள்ளி குதிக்கிறார். ராமைப் போல உங்களுக்குள் இயற்கையை நேசிக்கும் ஒரு மனிதன் இருக்கிறாரா? நீங்களும் பால்ம் கவுண்ட்டி வீடுகளில் ஒன்றை வாங்க ஆசைப் படுகிறீர்களா? உடனே தொடர்புகொள்ளுங்கள்.

தொடர்புக்கு..

கே.இ. ஹவுசிங் பிரைவேட் லிமிடெட்

எண் 18B, லஸ் அவென்யூ,

மயிலாப்பூர், சென்னை 600004.

தொலைபேசி : 044- 64587458, 64587901, 48554656

அலைபேசி : 9176987707

ஃபேக்ஸ்: +91 44 4261 8248

மின்னஞ்சல்: [email protected]

விளம்பர பகுதி

திங்கள், 29 ஜுன் 2020

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon