மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, திங்கள், 28 செப் 2020

ரிலாக்ஸ் டைம்: முலாம் வித் ஆரஞ்சு ஜூஸ்!

ரிலாக்ஸ் டைம்: முலாம் வித் ஆரஞ்சு ஜூஸ்!

இப்போதெல்லாம் அனைவருக்கும் ஸ்ட்ரெஸ் அதிகமாகிக்கொண்டே போகிறது. ஓய்வின்றி தொடர்ந்து மொபைல் போன்களைப் பார்த்துக் கொண்டே இருக்கிறோம். இவற்றால் கண்களில் கருவளையம் ஏற்படுகிறது. ஓய்வின்மையும், தூக்கம் போதாமையும் கண்களை வெகுவாகப் பாதிக்கின்றன. அதைப் போக்க கோடைக் காலத்தில் அதிகளவில் கிடைக்கும் முலாம் பழத்தில் இந்த ஜூஸ் செய்து அருந்தலாம். முலாம் பழம் நோய்களைத் தடுக்கக்கூடியது என்பது மட்டுமல்ல... உடலுக்குப் புத்துணர்வையும் அளிக்கக்கூடியது.

எப்படிச் செய்வது?

முலாம்பழத்தை தோல் நீக்கி, சிறிது சிறிதாக நறுக்கவும். முலாம் பழம், ஆரஞ்சு சாறு இரண்டையும் மிக்ஸியில் அரைத்து வடிகட்டவும். இதை ஃப்ரிட்ஜில் வைத்து குளிர்ந்ததும் சாப்பிடவும்.

சிறப்பு

இந்த ஜூஸில் பீட்டா கரோட்டின் அதிகம். கண் வறட்சி, மாலைக் கண் நோயையெல்லாம் குணமாக்கவல்லது. உடல் உஷ்ணத்தைப் போக்க கூடியது. வயிற்றுப்போக்கை குணப்படுத்தும். இதில் வைட்டமின் ஏ, இரும்புச் சத்து, பொட்டாசியம் சத்து, மினரல் அதிகமாக உள்ளது. நீர்வேட்கையைத் தணிக்கும் பானமாகவும் இது அமையும்.

செவ்வாய், 30 ஜுன் 2020

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon