மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, புதன், 21 அக் 2020

கிச்சன் கீர்த்தனா: ராகி சப்பாத்தி

கிச்சன் கீர்த்தனா: ராகி சப்பாத்தி

யாழ்ப்பாணத்தில் ‘குரக்கன்’ என்றும், தமிழ்நாட்டில் சேலம் பகுதியில் ‘ஆரியம்’ என்றும், தென்தமிழ்நாட்டில் ‘கேப்பை’ என்றும், திருச்சி வட்டாரத்தில் ‘ராகி’ என்றும் அழைக்கப்படும் கேழ்வரகு, நம் மண்ணோடும், மக்களின் கலாச்சாரத்தோடும் இரண்டறக் கலந்த உணவு. பலருக்கும் ராகி என்றால் கூழும், களியும்தான் நினைவுக்கு வரும். ஆனால் இந்த ராகியைக் கொண்டு குறைவான நேரத்தில் சுவையான ராகி சப்பாத்தியும் செய்து அசத்தலாம்.

என்ன தேவை?

ராகி மாவு - ஒரு கப்

கோதுமை மாவு - ஒரு கப்

தண்ணீர் - 2 கப்

நெய் - 4 டீஸ்பூன்

எண்ணெய் - தேவையான அளவு

உப்பு - ஒரு டீஸ்பூன்

எப்படிச் செய்வது?

ஒரு பாத்திரத்தில் ராகி மாவு, கோதுமை மாவு, 2 டீஸ்பூன் எண்ணெய், உப்பு சேர்த்து நன்றாகக் கலக்கவும். தண்ணீரை மாவில் கொஞ்சம் கொஞ்சமாக ஊற்றிப் பிசையவும். அரை மணி நேரம் மூடி வைக்கவும். மாவை உருண்டைகளாகச் செய்து சப்பாத்தியாகத் திரட்டிக்கொள்ளவும். தோசைக்கல்லில் எண்ணெய் தடவி சப்பாத்தியைப் போட்டு சுட்டெடுக்கவும். சப்பாத்தி சூடாக இருக்கும்போது மேலே கால் டீஸ்பூன் நெய் தடவவும்.

நேற்றைய ரெசிப்பி: ராகி புட்டு

திங்கள், 29 ஜுன் 2020

chevronLeft iconமுந்தையது