மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, புதன், 23 செப் 2020

சென்னையில் உருவான கல்விக் கடல்!

 சென்னையில் உருவான கல்விக் கடல்!

விளம்பரம்

1992இல் தொடங்கப்பட்ட வேல்ஸ் குழுமத்தின் கல்விச் சேவை 2020ஆம் ஆண்டுக்குள் பல மடங்கு வளர்ச்சியைக் கண்டிருக்கிறது. வருடத்துக்கு ஒரு கல்வி நிறுவனம் என்ற குறிக்கோளின் வெற்றி பல்வேறு கல்லூரிகளை இணைத்து 2008ஆம் ஆண்டில் வேல்ஸ் பல்கலைக்கழகமாக உருவானபோது முழுமை பெற்றது. இதன்மூலம், இந்திய அளவில் சிறுவயதிலேயே பல்கலைக்கழக நிறுவனராக பொறுப்பேற்ற பெருமையையும் பெற்றார், வேல்ஸ் குழுமத்தின் நிறுவனர் டாக்டர் திரு. ஐசரி கே.கணேசன்.

பச்சையப்பா கல்லூரியில் முதுகலை பட்டப்படிப்பை முடித்துவிட்டு என்ன செய்வதென்று யோசித்த அந்த மிடில் கிளாஸ் பட்டதாரிக்கு முன் இரண்டு பாதைகள் இருந்தன. ஒன்று, கற்ற அறிவினால் வேலையில் சேர்ந்து தன்னை உயர்த்திக்கொள்வது. மற்றொன்று, தனக்குக் கிடைத்த கல்வியறிவு போல மற்றவர்களுக்கும் கிடைக்கவேண்டும் என்பது. இவற்றில் முதல் வழியில் சென்றவர்கள் அதிகம் என்பதால், தனது பாதையை மற்றவர்களுக்கு உதவும் வழியை நோக்கித் திருப்பினார். பெருமுயற்சிகளுக்குப் பிறகு, ஒரு இடத்தை வாடகைக்கு எடுத்து 36 மாணவர்களுடன் தொடங்கப்பட்ட கல்வி நிறுவனம் தான், இப்போது 25,000 மாணவர்களுடன் 25 நிறுவனங்களாக பரவி விரிந்து 5000 ஊழியர்களால் பராமரிக்கப்பட்டு ஒற்றைத் தலைமையின் கீழ் வீரநடை போட்டுக்கொண்டிருக்கும் ‘வேல்ஸ் குழுமம்’. இதனை சாத்தியமாக்கிக் காட்டியவர், அமரர் திரு. ஐசரி வேலன் அவர்களின் மகனும் வேல்ஸ் பல்கலைக்கழகம் மற்றும் வேல்ஸ் குழுமத்தின் நிறுவனருமான திரு. டாக்டர் ஐசரி கே.கணேசன்.

கல்வியின் முக்கியத்துவம் அறிந்ததாலும், அந்தக் கல்வி தேவையனவர்களுக்குச் சென்றடைய வேண்டிய தீவிரத்தை உணர்ந்ததாலும் ஒவ்வொரு வருடமும் புதிய கல்வி நிறுவனங்களைத் தொடங்கவேண்டும் என்ற உறுதியேற்று, 25 வருடங்களில் 25 நிறுவனங்களை உருவாக்கி அவற்றை மக்கள் சேவைக்காக பயன்படுத்தி வருகிறது வேல்ஸ் குழுமம். 48 இளங்கலை பட்டதாரி படிப்புகள், 40 முதுகலை பட்டதாரி படிப்புகள் மற்றும் 10 டிப்ளமோ படிப்புகளுக்கான கல்வியை சென்னை, ஹைதராபாத் மற்றும் சிங்கப்பூர் உள்ளிட்ட இடங்களிலிருந்து வழங்கி வருகிறது வேல்ஸ் குழுமம்.

முதல் முறையாக கடல் அறிவியல் சார்ந்த படிப்புகளை பயிற்றுவிக்கும் தனியார் கல்வி அமைப்பாகவும் வேல்ஸ் குழுமம் இருக்கிறது. இத்தனை சிறப்புகளைப் பெற்ற வேல்ஸ் குழுமத்தின் கல்விச் சேவையின் ஆழம் குறித்துத் தொடர்ந்து பார்ப்போம்...

விளம்பர பகுதி

சனி, 23 மே 2020

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon