மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, திங்கள், 1 ஜுன் 2020

கிச்சன் கீர்த்தனா: கத்திரிக்காய் ரைஸ்

கிச்சன் கீர்த்தனா: கத்திரிக்காய் ரைஸ்

நீர் அதிகம் அருந்தாமை, உடலுழைப்பு இல்லாத வாழ்க்கை முறை போன்ற காரணங்களால் இன்று பலரும் மலச்சிக்கல் பிரச்சினையால் அவதியுறுகின்றனர். அதற்கான நிவாரணங்களில் ஒன்று கத்திரிக்காய். உடலில் நீர்ச்சத்தை அதிகரித்து மலச்சிக்கல் பிரச்சினையை நீக்கும் தன்மை கத்திரிக்காய்க்கு உண்டு. ஏதோ ஒரு காரணத்தால் கத்திரிக்காயை விரும்பாதவர்கள்கூட இந்த கத்திரிக்காய் சாதத்தைச் சாப்பிடுவது நல்ல ஆரோக்கியத்தைத் தரும்.

என்ன தேவை?

வடித்த சாதம் - ஒரு கிண்ணம்

பிஞ்சுக் கத்திரிக்காய் - 6

வெங்காயம் - ஒன்று

கடுகு - கால் தேக்கரண்டி

கரம் மசாலாத்தூள் - அரை தேக்கரண்டி

பச்சை மிளகாய் - ஒன்று

மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை

இஞ்சி-பூண்டு விழுது - அரை தேக்கரண்டி

எண்ணெய், உப்பு - தேவையான அளவு

எப்படிச் செய்வது?

கடாயில் எண்ணெய் விட்டு, கடுகு தாளித்து... நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து நன்கு வதக்கவும். பிறகு, நறுக்கிய கத்திரிக்காய் சேர்த்து, வதக்கியதும் இஞ்சி - பூண்டு விழுது, கரம் மசாலாத்தூள், மஞ்சள்தூள், உப்பு போட்டுக் கலந்து வதக்கவும். கத்திரிக்காய் வெந்து மணம் வந்ததும் இறக்கவும். இந்தக் கலவையில் சூடான சாதத்தைச் சேர்த்து, நெய் அல்லது நல்லெண்ணெய் கலந்து பரிமாறலாம்.

நேற்றைய ரெசிப்பி: புதினா ரைஸ்

வெள்ளி, 28 பிப் 2020

chevronLeft iconமுந்தையது