மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, ஞாயிறு, 7 ஜுன் 2020

கொடுக்க மறக்காத வேல்ஸ் கொடை!

 கொடுக்க மறக்காத வேல்ஸ் கொடை!

மனித உயிர்களை உருவாக்கியது மட்டுமல்ல; அந்த மனிதர்களிடையே இருக்க வேண்டிய மனிதத்தை சோதித்துப் பார்ப்பதையும் இயற்கை அவ்வப்போது நடத்திவிடும். அப்படி இயற்கை சோதிக்கும்போதெல்லாம் முதலில் நீளும் கரம், பல்லாவரத்திலிருக்கும் வேல்ஸ் குழுமத்திடமிருந்து தான்.

கஜா, வர்தா, தானே ஆகிய புயல்களாலும், சென்னை மற்றும் கேரளாவில் ஏற்பட்ட வெள்ளத்தினாலும், கார்கில் மற்றும் ஜம்மு காஷ்மீர் ஆகிய இடங்களில் நடைபெற்ற போர்களினாலும் மனிதம் சோதிக்கப்பட்டபோதெல்லாம் வேல்ஸ் குழுமத்தின் கொடைக் கரங்கள் கோடிக்கணக்கில் பணத்தை கொண்டுபோய் சேர்த்தன. ஆபத்துக்காலத்தில் உதவுவதோடு நின்றுவிடக்கூடாது என்பதால், இந்திய அளவில் தேவை ஏற்படும் மாணவர்கள் ஒவ்வொருவராய் தேடிப்பிடித்து அவர்களது கல்விக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் செய்கிறது வேல்ஸ் குழுமம். வருடாந்திர கல்வி உதவித்தொகையாக ஐந்து கோடி ரூபாயை வேல்ஸ் குழுமம் ஒதுக்கி செலவிட்டு வருகிறது.

தங்களது கல்வி நிறுவனங்களில் படிக்கும் மாணவர்கள் மட்டுமின்றி, எந்த நிறுவனத்தில் படிப்பவர்களாக இருந்தாலும், உள்ளார்ந்த திறமை இருப்பின் அவர்களுக்கு எவ்வித நிபந்தனையுமின்றி கல்வி உதவித்தொகையை வழங்கும் சிறப்பினை வேல்ஸ் குழுமம் செய்துவருகிறது. ஒவ்வொரு வருடமும் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் இப்படிப் படித்து இந்தியாவையே உலக அரங்கில் திரும்பிப் பார்க்கவைக்கும் பணிகளில் சேர்கின்றனர். அமரர் ஐசரி வேலன் அவர்களின் நினைவாக திரையுலகத்தைச் சார்ந்த கலைஞர்கள் 200 பேருக்கு ஓய்வூதியத்தினை 15 வருடங்களுக்கும் மேலாக வேல்ஸ் குழுமத்தின் சார்பில் ஐசரி கே.கணேஷ் வழங்கிவருகிறார். கொடை கொடுப்பதில் நிபந்தனையற்ற தன்மையை கொண்டுள்ள சிறப்பு ஐசரி கே.கணேஷ் அவர்களுக்கே உரியது.

விளம்பர பகுதி

வெள்ளி, 21 பிப் 2020

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon