மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, ஞாயிறு, 7 ஜுன் 2020

கிச்சன் கீர்த்தனா: மரவள்ளிக்கிழங்கு பெப்பர் ஃப்ரை

கிச்சன் கீர்த்தனா: மரவள்ளிக்கிழங்கு பெப்பர் ஃப்ரை

வெப்பமண்டல, துணைவெப்பமண்டலப் பகுதிகளில் ஆண்டுப் பயிராகப் பயிரிடப்படும் மரவள்ளிக்கிழங்கு, தமிழ்நாட்டில் அதிகம் கிடைக்கக்கூடியது. ஃப்ரைடு அயிட்டங்கள் என்றால் விரும்பி உண்ணும் நம்மவர்களுக்கு, இந்த மரவள்ளிக்கிழங்கு பெப்பர் ஃப்ரை செய்து கொடுங்கள். இன்னும் கொஞ்சம் கொண்டு வா என்பார்கள்.

என்ன தேவை?

மரவள்ளிக்கிழங்கு - அரை கிலோ

மஞ்சள்தூள் - அரை டீஸ்பூன்

கறிவேப்பிலை - 2 ஆர்க்கு,

கார்ன் மாவு (அ) கடலை மாவு - 50 கிராம்

மிளகுத்தூள் - 2 டீஸ்பூன்,

எண்ணெய் - அரை லிட்டர்

உப்பு - ஒரு டீஸ்பூன்

எப்படிச் செய்வது?

மரவள்ளிக்கிழங்கைப் பெரிய துண்டுகளாக நறுக்கி நன்கு கொதிக்கும் நீரில் போட்டு, ஒரு மணி நேரம் மூடி வைக்கவும். பின்பு அதை வடித்து தோல் எடுத்து விரல் அளவு நீளத்துக்கு நறுக்கிக் கொள்ளவும். அதில் உப்பு, மஞ்சள்தூள், மிளகுத்தூள், கார்ன் மாவு (அ) கடலை மாவு சேர்த்து பிசறிக் கொள்ளவும். வாணலில் எண்ணெய்விட்டு கறிவேப்பிலையைப் பொரித்தெடுத்துக் கொள்ளவும். பின்பு அதில் பிசிறி வைத்துள்ள மரவள்ளிக்கிழங்கைப் போட்டு பொரித்தெடுக்கவும். சுவையான மரவள்ளிக்கிழங்கு பெப்பர் ஃப்ரை ரெடி.

வெள்ளி, 21 பிப் 2020

chevronLeft iconமுந்தையது