மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, வியாழன், 28 மே 2020

கிச்சன் கீர்த்தனா: மரவள்ளிக்கிழங்கு காரப்புட்டு

கிச்சன் கீர்த்தனா: மரவள்ளிக்கிழங்கு காரப்புட்டு

உலகம் முழுவதும் ஒவ்வொரு நாளும் சுமார் 5 கோடி மக்கள் மரவள்ளிக்கிழங்கில் இருந்து தயாரிக்கப்படும் உணவுப் பொருட்களைப் பயன்படுத்துகின்றனர். மரவள்ளிக்கிழங்கு சீசனில் குழந்தைகளுக்கு மாலை நேர சிற்றுண்டியாக, எளிதாகச் செய்யக்கூடிய இந்த மரவள்ளிக்கிழங்கு காரப்புட்டு செய்து தரலாம்.

என்ன தேவை?

மரவள்ளிக்கிழங்கு - அரை கிலோ

தேங்காய் - அரை மூடி (துருவவும்)

கடலைப்பருப்பு - 2 டீஸ்பூன்

வேர்க்கடலை - 50 கிராம்

காய்ந்த மிளகாய் - 6

மல்லி (தனியா) - ஒரு டீஸ்பூன்

எள் - ஒரு டீஸ்பூன்

வெங்காயம் - 100 கிராம்

கறிவேப்பிலை - ஒரு ஆர்க்கு

எண்ணெய் - 4 டீஸ்பூன்

உப்பு - தேவைக்கேற்ப

கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப் பருப்பு - தலா ஒரு டீஸ்பூன் (தாளிக்க)

எப்படிச் செய்வது?

கடலைப்பருப்பு, வேர்க்கடலை, காய்ந்த மிளகாய், மல்லி, எள் ஆகியவற்றை வறுத்து கொரகொரப்பாகப் பொடித்துக்கொள்ளவும். மரவள்ளிக்கிழங்கை வேக வைத்து, தோலுரித்து உதிர்த்துக்கொள்ளவும். வாணலியில் எண்ணெய்விட்டு கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, கறிவேப்பிலை தாளித்து, வெங்காயம் சேர்த்து வதக்கவும். பின்பு அதில் உதிர்த்து எடுத்த மரவள்ளிக்கிழங்கு, துருவிய தேங்காய், வறுத்துப் பொடித்த பொடி, உப்பு சேர்த்து நன்கு புரட்டவும். மரவள்ளிக்கிழங்கு புட்டு தயார்.

நேற்றைய ரெசிப்பி: மரவள்ளிக்கிழங்கு முறுக்கு

வியாழன், 20 பிப் 2020

chevronLeft iconமுந்தையது