மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, திங்கள், 25 மே 2020

கிச்சன் கீர்த்தனா: பூண்டு புரொக்கோலி மஷ்ரூம் ஃப்ரை

கிச்சன் கீர்த்தனா: பூண்டு புரொக்கோலி மஷ்ரூம் ஃப்ரை

சனி, ஞாயிறு போன்ற தினங்களில், குழந்தைகளுக்கு யம்மியாக சமைத்துக் கொடுக்க வேண்டுமென்ற ஆசை எல்லா பெற்றோருக்கும் இருக்கும். அப்படியானவர்களுக்காக, சூப்பர் டூப்பர் யம்மி ரெசிப்பி இந்த பூண்டு புரொக்கோலி மஷ்ரூம் ஃப்ரை. குழந்தைகளுக்கு மட்டுமல்ல; பெரியவர்களுக்கும் ஏற்றது.

என்ன தேவை?

காளான் - 100 கிராம்

புரொக்கோலி - 100 கிராம் (நறுக்கவும்)

பூண்டு - 5 பல்

எண்ணெய் - 2 டீஸ்பூன்

மிளகுத்தூள் - ஒரு டீஸ்பூன்

ஒரிகானோ - அரை டீஸ்பூன்

உப்பு - தேவையான அளவு.

எப்படிச் செய்வது?

கடாயில் எண்ணெய் ஊற்றி பூண்டைச் சேர்த்து நன்கு வதக்கவும். பின்பு புரொக்கோலி சேர்த்து வேகவைக்கவும். புரொக்கோலி பாதி வெந்தவுடன் சுத்தம் செய்து நறுக்கிவைத்த காளான் சேர்த்து நன்கு வதக்கவும். பின்பு உப்பு, மிளகுத்தூள், ஒரிகானோ சேர்த்து நன்கு டாஸ் செய்து இறக்கவும்.

வெள்ளி, 14 பிப் 2020

chevronLeft iconமுந்தையது