மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 26 ஜன 2020

கொடியேற்றிய குடியரசுத் தலைவர்: கவனத்தை ஈர்த்த அய்யனார் சிலை!

கொடியேற்றிய குடியரசுத் தலைவர்: கவனத்தை ஈர்த்த அய்யனார் சிலை!

நாடு முழுவதும் 71ஆவது குடியரசு தின விழா கொண்டாடப்பட்டு வருகிறது. டெல்லி செங்கோட்டையிலுள்ள ராஜபாதையில் கொடியேற்ற வருகை தந்த குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை, பிரதமர் மோடி, பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத்சிங், முப்படை தளபதிகள் வரவேற்றனர். பின்னர் 21 குண்டுகள் முழங்க, தேசிய கொடியை ஏற்றி வைத்த குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த், முப்படைகளின் அணி வகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.

குடியரசு தின விழா சிறப்பு விருந்தினராக பிரேசில் அதிபர் பொல்சனாரோ பங்கேற்றுள்ளார். உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி போப்டே, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உள்ளிட்டோர் விழாவில் பங்கேற்றனர்.

இதனைத் தொடர்ந்து குடியரசு தின விழாவில் தமிழகம், ஆந்திரா, தெலங்கானா, அசாம், உத்தரப் பிரதேசம் உள்பட 16 மாநிலங்கள் சார்பில் அலங்கார ஊர்திகள் இடம்பெற்றன. தமிழ்நாட்டு வாகனத்தில் இடம்பெற்ற தமிழர்களின் காவல் தெய்வமாக வணங்கப்படும் அய்யனாரின் பிரம்மாண்ட சிலை பார்வையாளர்களை வெகுவாகக் கவர்ந்தது. வாகனத்திற்கு முன் 30க்கும் மேற்பட்ட ஒயிலாட்டம் ஆடும் கலைஞர்கள் தங்கள் திறமையை வெளிப்படுத்தினர்.

கிச்சன் கீர்த்தனா: சண்டே ஸ்பெஷல் - சங்கரா மீனும் கெட்டியான குழம்பும்! ...

3 நிமிட வாசிப்பு

கிச்சன் கீர்த்தனா: சண்டே ஸ்பெஷல் - சங்கரா மீனும் கெட்டியான குழம்பும்!

ஓட்டுக்கு பணம்: மக்களிடம் சத்தியம் வாங்க முடியாது!

2 நிமிட வாசிப்பு

ஓட்டுக்கு பணம்: மக்களிடம் சத்தியம் வாங்க முடியாது!

ரிலாக்ஸ் டைம்: கேழ்வரகு இனிப்பு அடை!

2 நிமிட வாசிப்பு

ரிலாக்ஸ் டைம்: கேழ்வரகு இனிப்பு அடை!

ஞாயிறு 26 ஜன 2020