மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, புதன், 23 செப் 2020

பேச்சுவார்த்தை: பாகிஸ்தானுக்கு கதவு திறக்கும் இந்தியா

பேச்சுவார்த்தை: பாகிஸ்தானுக்கு கதவு திறக்கும் இந்தியா

இந்தியா பாகிஸ்தான் பிரச்சினை முற்றி வரும் நிலையில், பாகிஸ்தானை பேச்சுவார்த்தைக்கு அழைக்கும் முக்கிய நகர்வு ஒன்றை இந்தியா மேற்கொண்டு வருகிறது. இந்த ஆண்டு இறுதியில் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (எஸ்சிஓ) உச்சி மாநாட்டை நடத்தும்போது அதன் அனைத்து உறுப்பு நாடுகளின் அரசாங்கத் தலைவர்களையும் இந்தியா அழைக்கும் என்று இந்தியா நேற்று (ஜனவரி 16) தெரிவித்துள்ளது.

எஸ்சிஓ என்பது சீனா தலைமையிலான பொருளாதார மற்றும் பாதுகாப்பு அமைப்பு, இது ரஷ்யா, சீனா, கிர்கிஸ் குடியரசு, கஜகஸ்தான், தஜிகிஸ்தான் மற்றும் உஸ்பெகிஸ்தான் ஆகிய நாடுகளால் 2001 இல் நிறுவப்பட்டது. இந்தியாவும் பாகிஸ்தானும் 2017 ஆம் ஆண்டில் இந்த அமைப்பில் உறுப்பினர்களாக ஆயின., இதுவரை நடந்த கூட்டங்களில் இரு தரப்பு பிரதிநிதிகள் தனித்தனியாக சந்தித்ததில்லை. ஆனால் நேற்று வெளியுறவு அமைச்சகத்தின் அதிகாரப்பூர்வ செய்தித் தொடர்பாளர் ரவீஷ் குமார், “இந்த ஆண்டு இறுதியில் ஷாங்காய் நாடுகளின் கூட்டத்தை இந்தியா நடத்துகிறது. நடைமுறையின்படி, எட்டு உறுப்பினர்களும் நான்கு பார்வையாளர் நாடுகளும் அழைக்கப்படுவார்கள்” என்று கூறியிருக்கிறார்.

இதன் மூலம் பாகிஸ்தான் பிரதிநிதியும் டெல்லிக்கு அழைக்கப்படுவார் என்பது தெளிவாகியுள்ளது.காஷ்மீரில் 370 வது பிரிவை இந்தியா அகற்றிய பின்னர் மோசமடைந்த இருதரப்பு பதட்டங்களைத் தொடர்ந்து, இரு தரப்பினரும் ஒருவருக்கொருவர் தலைநகரங்களுக்கு முழுநேர தூதர்களையே நியமிக்கவில்லை.

இந்நிலையில்தான் முக்கியத்துவம் வாய்ந்ந்த இந்தியாவின் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

வெள்ளி, 17 ஜன 2020

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon