qதிமுக- காங்கிரஸ்: சிதம்பரம் போட்ட உத்தரவு!

public

திமுகவுக்கும் காங்கிரசுக்கும் இடையிலான கூட்டணிப் போர் இன்னும் முடிவதாக இல்லை. நேற்று (ஜனவரி 15) பொங்கல் திருநாளன்று திமுக பொருளாளரும் தலைவருக்கு அடுத்த நிலையில் இருக்கக் கூடிய பொறுப்பான தலைவருமான துரைமுருகன் அளித்த பேட்டியை காங்கிரசார் கடும் கோபத்தோடு எதிர்கொண்டிருக்கிறார்கள்

“விலகிப் போகிறவர்கள் போய்விட்டுப் போகட்டும். அதனால் எங்களுக்கு என்ன நஷ்டம்? காங்கிரஸ் விலகுவதைப் பற்றி நாங்கள் கவலைப்படவில்லை. குறிப்பாக நான் கவலைப்படவில்லை” என்று தெரிவித்தார். இதனால் ஓட்டு எதுவும் பாதிக்காதா என்று செய்தியாளர் கேள்வி எழுப்ப, “ஒன்றும் பாதிக்காது. ஒட்டு இருந்தால்தானே பாதிக்க? கூட்டணி குறித்து காலம்தான் பதில் சொல்லும் என டி.ஆர்.பாலு சொல்லியிருக்கிறார். ஆனால், நான் பதிலே சொல்லிவிட்டேன்.” என்று துரைமுருகன் சொல்ல அப்போது அவர் அருகே வேலூர் எம்பி கதிர் ஆனந்த்து சிரித்துக் கொண்டிருந்தார்.

இது தமிழகத்தின் மற்ற பகுதி காங்கிரசாரை விட வேலூர் காங்கிரசாரை கடுமையான கோபத்துக்கு ஆளாக்கியுள்ளது,

“கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் வேலூர் தொகுதி தேர்தல் முதலில் துரைமுருகனின் பணப்பட்டுவாடால் நிறுத்தப்பட்டு பின் தனியாக ஆகஸ்டு 5 ஆம் தேதி நடந்தது. அப்போது காங்கிரஸாருக்கு தேர்தல் செலவுக்கு கூட துரைமுருகன் காசு கொடுக்கவில்லை. திமுகவினருக்கே கொடுக்க வில்லை என்பது வேறு விஷயம். அப்படி இருந்தபோதும் வாணியம்பாடி, பேரணாம்பட்டு உள்ளிட்ட பல பகுதிகளில் காங்கிரஸாரின் சுறுசுறுப்பு வேலைதான் அதிமுகவின் வேட்பாளரை விட சொற்ப ஓட்டுகளில் துரைமுருகன் மகனை ஜெயிக்க வைத்தது. தேர்தலுக்கு முன் கண்களை கசக்கிக் கொண்டு அழுவதும், தேர்தலுக்குப் பின் எடுத்தெறிந்து பேசுவதும் துரைமுருகனுக்கு புதிதல்ல. அதை தன் சொந்தக் கட்சியினரிடமே செய்திருக்கிறார் அவர்,

துரைமுருகன் பேட்டிக்குப் பிறகு கார்த்தி சிதம்பரம் தனது ஆதரவாளர்களுக்கு போன் போட்டு, இனியும் திமுகவை விட்டுவைக்கக் கூடாது. கடுமையாக தாக்கி சமூக தளங்களில் எழுதுங்கள் என்று உத்தரவிட்டிருக்கிறார். இது சிதம்பரம் வழியாகத்தான் வந்திருக்கும். அதையடுத்து சிதம்பரம், கார்த்தி சிதம்பரத்தின் ஆதரவாளர்கள் இப்போது சமூக தளங்களில் திமுக எதிர்ப்பைக் கூர்மைப்படுத்தி வருகிறார்கள்.

மேலும் மாநிலக் காங்கிரஸ் தலைவருக்கான அதிகாரம் காங்கிரசில் இல்லை என்று முக்கிய காங்கிரஸ் பிரமுகர் ஒருவர் பதிவிட்ட ஃபேஸ்புக் பதிவுக்கு தமிழக காங்கிரஸ் தலைவர் அழகிரியின் மனைவி சாந்தி அழகிரி லைக் போட்டு, ‘தேங்க்யூ’ என்று கருத்திட்டிருக்கிறார்.

சிதம்பரத்தால் தேர்வு செய்யப்பட்ட அழகிரி திமுகவை எதிர்க்கத் துணிந்துவிட்டார். அவர் பேட்டிகளில் பூசி மெழுகி பேசிவந்தாலும் டெல்லி சென்று வந்தபிறகு திமுக எதிர்ப்பை கடுமையாக்கத் துணிந்துவிட்டார்”என்கிறார்கள்.�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *