மின்னம்பலம் மின்னம்பலம்
ஞாயிறு, 29 நவ 2020

பக்தியில் கரைய அழைக்கிறது சிவாங்க சாதனா

 பக்தியில் கரைய அழைக்கிறது சிவாங்க சாதனா

விளம்பரம்

பக்தி என்பது உங்களை ஒன்றுமில்லாமல் கரைத்து தெய்வீகத்தின் கையாக மாற்றும் ஒரு கருவி என்கிறார் சத்குரு. அதை மெய்ப்பிப்பதுபோல் இதோ பெண்களுக்கான சிவாங்க சாதனா என்றா ஆன்மீகத் திருவிழாவை பெண்களுக்கென்றே பிரத்யேகமாக நடத்துகிறது ஈஷா யோகா மையம்.

பெண்களுக்கான சிவாங்க சாதனா என்பது பக்தியை உள்ளிருந்து வெளிப்படுத்துவதற்கான ஒரு வாய்ப்பாகும். உத்தராயணம் அதாவது சூரியன் வடக்கு அரைக்கோளத்திற்கு மாறுகிற நாள்தான் இந்த ஆன்மீக வரவேற்புக்கு உகந்த நேரம். அதாவது ஜனவரி 18 ஆம் தேதி ஆரம்பித்து அடுத்து வரும் தைப்பூசத் திருநாளான பிப்ரவரி 8 வரைக்கும் இந்த சிவாங்க சாதனா காலம். தேவி வழிபாட்டுக்கான முக்கியமான காலகட்டமான இந்த விரத காலத்தில் லிங்க பைரவியின் அருள் பெண்களுக்கு பிரத்யேகமாகும். தைபூசத்தின் புனித நாளில் கோயம்புத்தூரில் உள்ள லிங்க பைரவியின் தங்குமிடத்தில் பெண்கள் சாதனா முடிவடைகிறது.

தைப்பூசம் தினத்தன்று கோவையில் உள்ள லிங்க பைரவியில் இருப்பது கட்டாயமாகும். விரத காலத்தில் ஒரு நாளைக்கு இரு முறை மட்டுமே உணவு உண்ண வேண்டும். முதல் உணவு மதியம் 12 மணிக்குப் பிறகு இருக்க வேண்டும். சாதனா காலத்தில் வெள்ளை அல்லது வெளிர் வண்ண ஆடைகளை அணிய வேண்டும்.

நீலகிரி உயிர்க்கோளத்தின் ஒரு பகுதியான வெள்ளியங்கிரி மலைகளின் அடிவாரத்தில் கோயம்புத்தூருக்கு மேற்கே 30 கிலோமீட்டர் தொலைவில் லிங்க பைரவி அமைந்துள்ளது. கோயம்புத்தூரிலிருந்து லிங்க பைரவி வரை வழக்கமான பஸ் மற்றும் டாக்ஸி சேவைகளும் கிடைக்கின்றன. கோயம்புத்தூர் மற்றும் லிங்க பைரவி இடையே தினசரி நேரடி பேருந்துகள் கிடைக்கின்றன.

நீங்கள் லிங்க பைரவி தரிசனத்துக்கு முன்பதிவு செய்ய விரும்பினால்....

For more details or any queries, please call +91-83000 83111 or write to us at [email protected]

விளம்பர பகுதி

செவ்வாய், 14 ஜன 2020

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon