மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, சனி, 8 ஆக 2020

எனக்குத் தமிழ் கற்றுக்கொடுத்தவர்: பி.சுசிலா

எனக்குத் தமிழ் கற்றுக்கொடுத்தவர்: பி.சுசிலா

பிரபல பின்னணி பாடகியான பி.சுசிலா, தமிழ் திரைப்பட பத்திரிகையாளர்கள் சங்கத்தின் பொங்கல் விழாவில் தனக்கு தமிழ் கற்றுக் கொடுத்தது யார் என்ற விவரத்தைப் பகிர்ந்துகொண்டார்.

தமிழ் திரைப்பட பத்திரிகையாளர்கள் சங்கத்தின் பொங்கல் விழா நேற்று (ஜனவரி 14) சென்னையில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினர்களாக இயக்குநர் சேரன், பின்னணி பாடகி பி.சுசிலா, எடிட்டர் மோகன், பிக்பாஸ் தர்ஷன், நடிகை சர்மிளா ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்த விழாவில் சங்கத்தின் பொங்கல் சிறப்பு மலரை பின்னணி பாடகி பி.சுசிலா மற்றும் எடிட்டர் மோகன் இருவரும் வெளியிட இயக்குநர் சேரன் மற்றும் பிக்பாஸ் தர்ஷன் இணைந்து பெற்றுக் கொண்டனர்.

அதன்பின் பாடகி பி.சுசிலா பேசும்போது, “எனக்கு என்ன பேசுறது தெரியல, 85 வயதாகி விட்டது. பத்திரிக்கையாளர்கள் எங்களுக்குத் துணையாக இருக்கிறார்கள். எனக்கு தமிழ் சொல்லி கொடுத்தது ஏவி. மெய்யப்ப செட்டியார். அதனால்தான் இப்போது தமிழில் பேச முடிகிறது. எனக்கு தமிழ்ப் பத்திரிகையாளர்கள் அமைப்பின் விழாவில் கலந்து கொள்ள இடம் கொடுத்ததற்கு நன்றி” என்று கூறியதோடு, ‘தமிழுக்கு அமுதென்று பேர்’ என்ற பாடலையும் பாடினார்.

பி.சுசிலா இது போன்ற பொது நிகழ்ச்சியில் பங்கு பெறுவதை நிறுத்தி பல ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில் பத்திரிகையாளர்கள் சங்க நிகழ்ச்சியில் கலந்துகொண்டது சந்தோஷமாக இருப்பதாகவும் கூறினார் பி.சுசிலா.

புதன், 15 ஜன 2020

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon