மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, சனி, 8 ஆக 2020

மெட்ரோ ரெயில்: மூன்று நாட்களுக்கு பாதி கட்டணம்!

மெட்ரோ ரெயில்: மூன்று நாட்களுக்கு பாதி கட்டணம்!

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 15,16,17 ஆகிய மூன்று நாட்களுக்கு சென்னை மெட்ரோ ரெயில் பயணக் கட்டணம் பாதியாகக் குறைக்கப்பட்டுள்ளது.

ஞாயிற்றுக்கிழமைகள் மற்றும் அரசு விடுமுறை நாட்களில் 50 சதவிகிதம் கட்டணச் சலுகை வழங்கப்படும் என ஏற்கனவே மெட்ரோ நிர்வாகம் அறிவித்திருந்தது.

அதன்படி பொங்கல் பண்டிகையான 15ஆம் தேதி முதல் 17 வரை இச்சலுகை வழங்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் காணும் பொங்கல் அன்று மெரினா கடற்கரை செல்ல வரும் பயணிகளுக்கு ஏதுவாக அரசினர் தோட்டம் மற்றும் டிஎம்எஸ் மெட்ரோ ரயில் நிலையங்களிலிருந்து மெரினாவுக்குப் பேருந்து சேவை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் மெட்ரோ நிர்வாகம் அறிவித்துள்ளது.

புதன், 15 ஜன 2020

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon