மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, திங்கள், 3 ஆக 2020

கன்னியாகுமரி: படகு போக்குவரத்து நேரம் நீட்டிப்பு!

கன்னியாகுமரி: படகு போக்குவரத்து நேரம் நீட்டிப்பு!

பொங்கல் பண்டிகையையொட்டி கன்னியாகுமரியில் விவேகானந்தர் மண்டபத்துக்குப் படகு போக்குவரத்து மூன்று மணி நேரம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

உலக புகழ்பெற்ற சுற்றுலாத் தலமான கன்னியாகுமரிக்கு தினமும் ஏராளமான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுச் சுற்றுலா பயணிகள் வருகிறார்கள். இவர்கள் கடல் நடுவே அமைந்துள்ள விவேகானந்தர் மண்டபம், திருவள்ளுவர் சிலை ஆகியவற்றை படகில் சென்று பார்வையிடுகிறார்கள். இதற்காக பூம்புகார் கப்பல் போக்குவரத்துக் கழகம் சார்பில் தினமும் காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை படகு போக்குவரத்து நடந்து வருகிறது.

தற்போது பொங்கல் பண்டிகை விடுமுறையையொட்டி கன்னியாகுமரிக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனால், விவேகானந்தர் மண்டபத்துக்கு படகு போக்குவரத்து கூடுதலாக 3 மணி நேரம் நீட்டிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

அதன்படி நாளை (ஜனவரி 16) முதல் 18ஆம் தேதி வரை மூன்று நாட்களும் காலை 8 மணிக்குத் தொடங்குவதற்குப் பதிலாக 2 மணி நேரம் முன்னதாக காலை 6 மணிக்குப் படகு போக்குவரத்து தொடங்குகிறது. இதுபோல், மாலை 4 மணிக்குப் பதிலாக ஒரு மணி நேரம் கூடுதலாக நீட்டித்து மாலை 5 மணி வரை படகு போக்குவரத்து நடைபெறும் என்று பூம்புகார் கப்பல் போக்குவரத்துக் கழக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

புதன், 15 ஜன 2020

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon