மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, திங்கள், 3 ஆக 2020

ஆஸ்திரேலிய காட்டுத்தீ: விலங்குகளுக்கு ஹெலிகாப்டர் மூலம் உணவு!

ஆஸ்திரேலிய காட்டுத்தீ: விலங்குகளுக்கு ஹெலிகாப்டர் மூலம் உணவு!

ஆஸ்திரேலியாவில் காட்டுத்தீ ஏற்பட்ட பகுதிகளில், உயிர் பிழைத்த விலங்குகள் சாப்பிடுவதற்காக ஹெலிகாப்டர் மூலம் ஏராளமான கேரட்டுகள் மற்றும் உருளைக்கிழங்குகளை அந்நாட்டு அரசு வீசி வருகிறது.

ஆஸ்திரேலியாவின் தென்கிழக்கு பகுதியில் உள்ள நியூ சவுத் வேல்ஸ் மற்றும் விக்டோரியா மாகாணங்களில் கடந்த செப்டம்பர் மாதம் முதல் காட்டுத்தீ பரவி வருகிறது. ஆயிரக்கணக்கான தீயணைப்புப் படையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த காட்டுத்தீயில் இதுவரை 24 பேர் பலியாகி உள்ளனர். மேலும் பல ஆயிரக்கணக்கான வன உயிரினங்கள் செத்து மடிந்துள்ளன. தன்னார்வலர்களும் மீட்புப்படையினரும் தீயில் சிக்கிய விலங்குகளை மீட்டு பராமரித்து அருகில் உள்ள வனப்பகுதிகளில் விட்டு வருகின்றனர்.

காட்டுத்தீயினால் பல்லாயிரக்கணக்கான தாவரங்கள் மற்றும் பயிர்கள் கருகி நாசமாகியுள்ளதால் உயிர் தப்பிய விலங்குகள் உணவு கிடைக்காமல் உயிரிழக்கும் அவலம் ஏற்பட்டுள்ளது.

இதைக் கருத்தில்கொண்டு காட்டுத்தீ ஏற்பட்ட பகுதிகளில், உயிர் பிழைத்த விலங்குகள் சாப்பிடுவதற்காக ஹெலிகாப்டர் மூலம் ஏராளமான கேரட்டுகள் மற்றும் உருளைக்கிழங்குகளை அந்நாட்டு அரசு கொட்டி வருகிறது.

இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், “காட்டுத்தீயைத் தொடர்ந்து உணவுத் தாவரங்கள் அழிந்து போனதால் உயிர் பிழைத்த விலங்குகள் உணவின்றி இறந்து வருகின்றன. இதைத் தடுக்க டன் கணக்கிலான கேரட் மற்றும் உருளைக்கிழங்குகள் ஹெலிகாப்டர் மூலம் வனப்பகுதிக்குள் வீசப்படுகின்றன. இவை விலங்குகளுக்கு உணவாகப் பயன்படும். அதே நேரத்தில் பின்னர் பயிராகவும் வாய்ப்பு உள்ளது” எனத் தெரிவித்தனர்.

புதன், 15 ஜன 2020

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon