மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, வெள்ளி, 18 செப் 2020

மன நலமே மகத்தான உடல் நலம்:

 மன நலமே மகத்தான உடல் நலம்:

விளம்பரம்

காவேரி மருத்துவமனை

கடந்த இரண்டு, மூன்று பத்தாண்டுகளாக ரத்த அழுத்தம் என்பது ஒரு மனித உடல் நலன் பற்றிய விவாதங்களின் போது முக்கிய அம்சமாக பேசப்பட்டது. ‘ப்ரஷர் மாத்திரை எடுத்துக்கிட்டீங்களா?’ என்பதெல்லாம் ஒரு ப்ரெஸ்டீஜ் விஷயமாகவே பார்க்கப்பட்டது.

நவீன யுகம் என்று நாம் வேகவேகமாக விரைந்துகொண்டிருக்கும் இப்போதைய நமது வாழ்க்கையில் ரத்த அழுத்தத்தை விட இன்னொரு அழுத்தம்தான் அனைவரையும் ஆட்டி வைக்கிறது. அதுதான் சித்த அழுத்தம். சித்தம் என்றால் மனம். இப்போதைய சிறுவர்கள் முதல் பெரியோர்கள் வரை மன அழுத்தத்தால் பாதிக்கப்படுகிற ஒரு சூழலைக் கட்டமைத்திருக்கிறது நமது சூழல்.

வீட்டிலாகட்டும், அலுவலகத்திலாகட்டும், பொது இடங்களிலாகட்டும் இப்போது மன அழுத்தம் என்ற வார்த்தை பரவலான புழக்கத்தில் இருக்கிறது. அதிக பணி, ஓய்வுக்கு நேரமில்லாமல் உழைப்பு, ஈடுபாடு இல்லாத சூழல் ஆகியவற்றால் மன அழுத்தம் உண்டாகிறது. மன அழுத்தம் என்றால் மனதுக்கு மட்டும்தானே பாதிப்பு என்று நம்மில் பலர் அதை பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை. மன நலனும், உடல் நலனும் ஒன்றையொன்று பின்னிப் பிணைந்தது. நல்ல உடல் நலனே, உள்ள நலனுக்கு ஆதாரம்.

எனவே மன அழுத்தம் அதிகரித்தால் அது உடல் நலனில் பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடும். அதிக மன அழுத்தம் அல்சரை உண்டாக்கும் என்பது பொதுவான கருத்து. இது உண்மையா? உண்மை என்பதற்கு மிகக் குறைந்த சான்றுகள் உள்ளன.

ஆனால் ஆய்வின் மூலம் ஒரு உண்மை நிரூபிக்கப்பட்டிருக்கிறது. என்னவெனில், மன அழுத்தம் ஒரு வலுவான ஆபத்துக் காரணி இல்லையென்றாலும்... மன அழுத்தம் பொதுவாக ஒருவரின் நோய் எதிர்ப்பு சக்தியைக் குறைக்கிறது. இது பல நோய்களுக்கு ஆளாகும் நிலையை ஏற்படுத்துகிறது.

2015-16 ஆம் ஆண்டில், அமெரிக்கா மற்றும் டென்மார்க்கில் உள்ள அரசு சுகாதார நிறுவனங்களால் ஒரு கூட்டு ஆய்வு நடத்தப்பட்டது. தங்கள் வாழ்க்கை மிகவும் மன அழுத்தமாக இருப்பதை உணர்ந்தவர்களும், குறைந்த அளவிலான மன அழுத்தத்தைக் கொண்டவர்களும் இந்த ஆய்வுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இதில் குறைந்த மன அழுத்தம் கொண்டவர்களை விட அதிக மன அழுத்தம் கொண்டவர்கள் வயிற்றுப் புண்கள் விஷயத்தில் இரு மடங்கு அதிக ஆபத்தைக் கொண்டிருந்தனர் என்று அறியப்பட்டது.

ஆக, மன அழுத்தம் என்பது வயிற்றுப் புண்களை மட்டுமல்ல பொதுவாகவே உடல் நலனுக்கு எதிரான காரணிகளை ஊக்குவிக்கக் கூடியது. எனவே ஒட்டுமொத்த நலவாழ்வுக்கு மன அழுத்தத்தை நிர்வகிப்பது முக்கியம்.

மன நலனும் உடல் நலனும் நலவாழ்வின் முக்கிய பாகங்கள் என்பதை வலியுறுத்தி திருச்சி காவேரி மருத்துவமனை

எத்தனையோ விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தியிருக்கிறது. மன அழுத்தத்தால் பாதிக்கப்படுகிறவர்களுக்கு சிகிச்சை என்பது தன்னம்பிக்கையை ஊட்டும்படி இருக்க வேண்டும். ஊசி என்பதை விட ஊக்க வார்த்தைகளே அதிகம் வேண்டும்.

இத்தகைய பொது சமூகப் பொறுப்புணர்ச்சியோடு செயல்பட்டுவரும் காவேரி மருத்துவமனை 30 படுக்கைகளுடன் தொடங்கப்பட்டு காவேரி மருத்துவமனை இன்று 550 படுக்கைகளுடன் விரிவாக்கமடைந்துள்ளது. அதுமட்டுமல்லாமல் இதயசிகிச்சைக்கென தனியாக ‘காவேரி ஹார்ட் சிட்டி’ என்ற பெயரில் 100 படுக்கைகளுடன் கூடிய வசதி இங்குள்ளது என்பது தனிச்சிறப்பு.

கலைஞர் காப்பீட்டுத்திட்டம் என அன்றைய அரசால்ஆரம்பித்து தற்போது முதலமைச்சரின் விரிவான காப்பீடு திட்டம் (Chief Minister's Comprehensive Health Insurance Scheme) என்ற பெயரில் தற்போது செயல்பட்டு வரும் இத்திட்டத்தின் மூலமாக, காவேரி மருத்துவமனை யை நாடிய அனைவரும் நலம் பெற்று வாழ்கிறார்கள்.

மன அழுத்தம் குறைப்போம். மகத்தான வாழ்வு வாழ்வோம்!

விளம்பர பகுதி

சனி, 11 ஜன 2020

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon