மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, புதன், 28 அக் 2020

கருப்புசாமி- சாய் பாபா- பாலாஜி: அப்டேட் குமாரு

கருப்புசாமி- சாய் பாபா- பாலாஜி: அப்டேட் குமாரு

‘படையப்பா நல்ல படமா? இல்லே இந்தியன் நல்ல படமா?’ன்னு டீக்கடை அண்ணா இன்னைக்கு திடீர்ன்னு கேட்டாரு, என்னைய ஏதோ வம்பில மாட்டி விட பிளான் பண்றாருன்னு தெரிஞ்சே, ‘ரெண்டுமே நல்ல படம் தான்’னு சொல்லிட்டேன். ‘சரி விடுப்பா, ரஜினி நல்ல நடிகரா? இல்லே கமல் நல்ல நடிகரான்னு சொல்லு’ன்னு அடுத்த ஆப்பு வைக்கிறாரு. ‘அய்யோ!! ரெண்டு பேரும் தனித்துவமிக்க நல்ல நடிகர்கள் அண்ணே’ன்னு சொல்லிட்டு இப்போ ஏன் உங்களுக்கு இந்த திடீர் குழப்பம்ன்னு கேட்டேன். ‘அது இல்ல தம்பி, இவங்கள்ல யாரு பெரியவங்கன்னு ரசிகர்கள் தான் அடிச்சுக்கிறாங்க. ஆனா ரெண்டு பேரும் நல்ல ஃப்ரெண்ட்ஸா ஒத்துமையா இருக்காங்க. அந்த ஒத்தும அவங்க அரசியல்ல கூட தெரியுது’ன்னு சொல்றாரு. ‘அவங்க ஃப்ரெண்ட்ஸுங்கிறது ஓகே தான். ஆனா அரசியல்ல என்னண்ணே ஒற்றுமை இருக்கு? ஒருத்தரு ஆன்மீக அரசியல், இன்னொருத்தர் மய்ய அரசியல். ரெண்டும் ரெண்டு துருவம் ஆச்சே’ன்னு கேட்டா, ‘அது சரிதான்பா. ஆனா ஒருத்தர் கட்சியே ஆரம்பிக்க மாட்டேங்கிறாரு. இன்னொருத்தரு கிராம சபை கூட்டுறாரே ஒழிய எலெக்‌ஷன்ல போட்டியிட மாட்டேங்கிறாரு அதான்’னு சொல்றாரு. நான் எந்த பதிலும் சொல்லாம, உங்க கடைல எப்போ வெங்காய பஜ்ஜி போடப்போறீங்கன்னு பேச்ச மாத்தி விட்டுட்டேன். நீங்க அப்டேட்ட படிங்க.

உள்ளூராட்டக்காரன்

கமல் 60 நிகழ்ச்சியிலும் தர்பார் ஆடியோ ரிலீஸ் பங்க்ஷன்லயும் ரஜினி அன்பை பத்தி தான் பேசியிருக்காரு

அன்பு ஒன்று தான் அனாதைங்கிறது யாருக்கு கேட்டுச்சோ இல்லையோ, ரஜினிக்கு கேட்டுருக்கு

ஜோக்கர்

கஷ்டப்படும் வரையில்தான் "கருப்பசாமி" குலதெய்வமாக இருக்கிறார்,

வசதி வாய்ப்பு வந்துவிட்டால்

"சாய்பாபா க்கும், பாலாஜிக்கும்" பக்தனாய் மாறிவிடுகிறார்கள்.

ச ப் பா ணி

பிரியாணிக்கு வெங்காய பச்சடி வைத்தார்.பழைய காதலியை பார்ப்பதுபோல் பார்த்தேன்

கடைநிலை ஊழியன்

சார்.. இந்த அட்ரெஸ் எங்க இருக்கு னு சொல்லுங்க..

-கைலாசம்..

-இன் கேர் ஆப் நித்தியானந்தா

செங்காந்தள்

வலதுசாரிகளை இடதுசாரிகளாகவும், இடதுசாரிகளை வலதுசாரிகளாகவும் மாற்றிவிடுகிறது செல்ஃபி...!!!

உள்ளூராட்டக்காரன்

ஹாஸ்பிடல் வார்டு பாய்க்கு ஒரு கவர்னருக்கு நிகரான அதிகாரம் உள்ளது

சிலந்தி

இரவிற்கு மட்டும் ஒரே வார்டன்..

நிலா..!!

அரஸ்

யாராவது ஒருவர் அன்பாக ஒரு

ரோஜா பூ கொடுத்தால் ரோஜா பூ விற்பனையாளர் கூட மகிழ்ச்சியடைவார்..

அன்புடன் கதிர்

லிமிடெட் மீல்ஸ்னா அன்லிமிடெட் மீல்ஸ்சை எதிர்பார்ப்பதும், அன் லிமிடெட் மீல்ஸ்னா இலையில் மீதம் வைப்பதும் டிசைன் !

SwaraVaithee

உள்ளாட்சித் தேர்தலில் போட்டியில்லை - கமல் அறிவிப்பு

அப்பறம் எதுக்கு கிராம சபை எல்லாம் கூட்டிகிட்டு இருந்தீங்க?

பாட்டி வைத்தியம்

அகத்திக் கீரை - சூட்டைத் தணித்து குளிர வைக்கும். பித்தம் குறைக்கும். கண் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் வராமல் காக்கும். உடலில் இருக்கும் நச்சுகளை முறியடிக்கும் குணம் இதற்கு உண்டு. துர்நீரை உடலில் இருந்து வெளியேற்ற இது உதவும்.

செந்திலின்_கிறுக்கல்கள்

ஹெட்செட் இன்றி அமையாது ரயில் பயணம்...!

அரஸ்

ஆபாச வீடியோ பார்த்த 3 ஆயிரம் பேரின் பட்டியல் தயார்" - ரவி, காவல்துறை கூடுதல் இயக்குனர்

அப்படியே வீதியோரங்களில் பசியோட இருக்க இடமில்லாம மற்றவர்களிடம் கையேந்தும் முதியவர்களின் பிள்ளைகளின் பட்டியலையும் தயார் பன்னிட்டு அரெஸ்ட் பண்ணுங்க..

கோழியின் கிறுக்கல்

ஹெல்மெட் மாட்டினா உயிரை காப்பாற்றும் என்பது மறுக்க முடியாது!!

ஆனால் அந்த ஹெல்மெட்டை காப்பாற்ற நாங்க படுற பாடு இருக்கே!!

வணடில மாட்டிட்டு போன ஹெல்மெட்டை காணோம்யா!!!

ச ப் பா ணி

குற்றங்கள் மன்னிக்கப்படுவதில்லை.

மறக்கப்படுவதற்கான தாமதம் அவர்களுக்கு கோர்ட்டுகளில் கிடைக்கிறது

செந்திலின்_கிறுக்கல்கள்

குழந்தைகளுக்கான மண்டே மோட்டிவேஷன் என்பது மழையால் பள்ளி விடுமுறை விடுவது மட்டுமே ஆகும்..!

-லாக் ஆஃப்

திங்கள், 9 டிச 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon