மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, சனி, 8 ஆக 2020

வாணி போஜனின் அசராத பயணம்!

வாணி போஜனின் அசராத பயணம்!

தெய்வமகள் சீரியலில் தமிழக மக்கள் தினம் தினம் பார்த்து ரசித்த நடிகை வாணி போஜன் தமிழ் சினிமாவிலும் தனது வெற்றிப்பயணத்தை தொடங்கிவிட்டார்.

தெலுங்கில் விஜய் தேவரகொண்டா தயாரித்த திரைப்படத்தில் நடிகையாக அறிமுகமான வாணி போஜன், தமிழில் ‘ஓ மை கடவுளே’ மற்றும் ‘லாக்-அப்’ ஆகிய படங்களின் மூலம் அறிமுகமாக காத்துக்கொண்டிருக்கிறார். இந்தப் படங்கள் ரிலீஸாவதற்குள் அடுத்த படத்திலும் கமிட் ஆகிவிட்டார்.

சாருகேஷ் சேகர் என்ற இயக்குநரின் திரைப்படத்தில் அடுத்ததாக நடிக்கும் அறிவிப்பை அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அறிவித்துள்ள வாணி போஜன், மேலும் தகவல்கள் விரைவில் வரும் எனக் குறிப்பிட்டிருக்கிறார். இதில் சுவாரசியமான தகவல் என்னவென்றால், இயக்குநராக வாணி போஜன் குறிப்பிட்டிருக்கும் சாருகேஷ் சேகர், கார்த்திக் சுப்பராஜின் பெஞ்ச் டாக்கீஸ் நிறுவனம் வெளியிட்ட குறும்படங்களில் ‘புழு’ என்ற குறும்படத்தை இயக்கியவர். பெஞ்ச் டாக்கீஸின் புது முயற்சியாக வெளியிடப்பட்ட குறும்படங்களின் தொகுப்பில், புழு குறும்படமும் தனித்துவமானது.

வியாழன், 5 டிச 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon