மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 5 டிச 2019

ஜெ. நினைவு தினம்: அடுத்த வருடம் ஒரே பேரணிதான்!?

ஜெ. நினைவு தினம்: அடுத்த வருடம் ஒரே பேரணிதான்!?

டிசம்பர் 5...

அதிமுக பொதுச் செயலாளரும், முன்னாள் முதல்வருமான ஜெயலலிதாவின் மூன்றாம் ஆண்டு நினைவு நாள் இன்று அனுசரிக்கப்படுகிறது. தமிழகம் முழுவதிலும் இருந்து அதிமுக தொண்டர்களும், அமமுக தொண்டர்களும் இன்று மெரினாவில் இருக்கும் ஜெயலலிதாவின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்த சென்னையில் திரண்டிருக்கிறார்கள்.

அதேபோல அதிமுக, அமமுக இரு கட்சிகளின் சார்பிலும் இன்று தனித்தனியாக அமைதிப் பேரணியும் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது.

அதிமுக சார்பில் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமியும் காலை 10 மணிக்கு அண்ணா சாலையில் இருக்கும் அண்ணா சிலையில் இருந்து அமைதிப் பேரணியாக புறப்பட்டு, மெரினாவில் ஜெ. நினைவிடம் சென்று உறுதிமொழி எடுத்துக் கொள்கின்றனர். அதேபோல 11 மணிக்கு அமமுக பொதுச் செயலாளர் தினகரன் தலைமையில் அமமுகவினர் அண்ணா சிலையில் இருந்து ஜெ. நினைவிடம் வரை அமைதிப் பேரணியாக செல்கின்றனர்.

இந்த இரு கட்சிகளுக்குமே இது அஞ்சலி நிகழ்வு மட்டுமல்ல, தங்களது அரசியல் வலிமையைக் காட்டும் நிகழ்வு என்பதால் மெரினாவை சுற்றியுள்ள சேப்பாக்கம், திருவல்லிக்கேணி, ராயப்பேட்டை, மயிலாப்பூர், புதுப்பேட்டை, சிந்தாதிரிப்பேட்டை பகுதி முழுவதும் கட்சி நிர்வாகிகளின் வாகனங்கள் குவிந்து கிடக்கின்றன.

அமமுக சார்பில் அமைதிப் பேரணிக்கான ஏற்பாடுகளை கவனித்து வரும் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி அமமுக பகுதிச் செயலாளர் சேப்பாக்கம் எல். ராஜேந்திரனிடம் பேசியபோது “போலீஸார் எங்களிடம் எத்தனை பேர் வருவீர்கள் என்று நான்கு நாட்களாகக் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள். தங்களை விட அமமுகவினர் அதிக அளவில் திரண்டுவிடக் கூடாது என்று ஆட்சியாளர்கள், போலீஸார் மூலம் கடுமையான கட்டுப்பாடுகளை எங்களுக்கு விதிக்கிறார்கள். அமமுகவினரின் வாகனங்கள் சென்னைக்குள் நுழைவதற்கு பல தடைகள் ஏற்படுத்தப்படுகின்றன. ஆனாலும் அவற்றையெல்லாம் மீறி ஆயிரக்கணக்கான அமமுக தொண்டர்கள், நிர்வாகிகள் குவிந்திருக்கிறார்கள்.

அம்மாவுக்கு இந்த வருடம்தான் இரண்டு அமைதிப் பேரணிகள் நடக்கும். அடுத்த வருடம் அம்மாவின் நினைவு நாளில் ஒரே அமைதிப் பேரணி அண்ணன் டிடிவி தலைமையில் நடக்கும். ஏனெனில் அடுத்த வருடம் அம்மா நினைவுநாளுக்கு இந்த ஆட்சி இருக்காது. அனைவரும் டிடிவி தலைமையில் இருப்பார்கள்”என்று அடித்துச் சொல்கிறார் சேப்பாக்கம் ராஜேந்திரன்.

ஒன்பது பேரூராட்சிகள் நகராட்சிகளாக மாற்றம்!

4 நிமிட வாசிப்பு

ஒன்பது பேரூராட்சிகள் நகராட்சிகளாக மாற்றம்!

ஒன்றிய அரசு ஊழியர்களுக்கு 3 சதவிகிதம் உயரும் அகவிலைப்படி!

2 நிமிட வாசிப்பு

ஒன்றிய அரசு ஊழியர்களுக்கு 3 சதவிகிதம்  உயரும் அகவிலைப்படி!

வேலைவாய்ப்பு: யுபிஎஸ்சி அறிவிப்பு!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: யுபிஎஸ்சி அறிவிப்பு!

வியாழன் 5 டிச 2019