மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, வெள்ளி, 5 ஜுன் 2020

இயற்கை வேளாண்மைக்காக ஈஷாவின் பயிற்சி...

 இயற்கை வேளாண்மைக்காக  ஈஷாவின் பயிற்சி...

தமிழக கிராமப்புறங்களில் இன்று மிகப் பரவலாக பேசப்படும் வார்த்தை இயற்கை விவசாயம், பாரம்பரிய விவசாயம். இயற்கை விவசாயத்தை வலியுறுத்தி பல இயக்கங்கள் நடைபெற்று வந்தாலும், அதையும் மீறி யூரியா, டி.ஏ.பி, களைக்கொல்லி ஆகியவற்றைப் பற்றியும் தொடர்ந்து விவசாயிகள் பேசிக் கொண்டுதான் இருக்கிறார்கள்.

வேதியியல் உரங்களைப் பயன்படுத்தாமல் வேளாண்மை செய்யவே முடியாதா? சுற்றிலும் எல்லாரும் வேதியியல் உரங்களை மூட்டை மூட்டையாக பயன்படுத்துகையில், நான் ஒருவன் மட்டும் என் நிலத்தில் இயற்கை வேளாண்மை செய்வது சாத்தியமா? இப்படி பல கேள்விகள் விவசாயிகளிடத்தில் எழுகின்றன.

இந்தக் கேள்விகளுக்கு வார்த்தைகளில் மட்டுமல்ல செயல் வடிவாகவும் பதில் அளிப்பதுதான் இயற்கை இடுபொருள் தயாரிப்புக் களப் பயிற்சி.

ஆம்... இயற்கை வேளாண்மைக்கு உங்களை கைப்பிடித்து அழைத்துச் செல்லும் காத்திரமான கரம் இது.

ஈஷா விவசாய இயக்கம், தாய்மண் பாரம்பரிய வேளாண் சார் உற்பத்தியாளர் நிறுவனம் ஆகியவை இணைந்து நடத்தும் இயற்கை இடுபொருள் தயாரிப்புக் களப் பயிற்சி வரும் டிசம்பர் 8 ஆம் தேதி ஞாயிற்றுக் கிழமை திருவாரூர் மாவட்டத்தில் நடக்கிறது.

இந்தப் பயிற்சியில் 12 வகையான இயற்கை வேளாண் இடுபொருட்களை தயாரிக்கும் பயிற்சி அளிக்கப்படுகிறது. குடவாசல் வட்டத்தில் பூந்தோட்டம் -எரவாஞ்சேரி சாலையில் கடகம்பாடியில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை இந்தப் பயிற்சி நடக்கிறது.

உங்கள் மண்ணைக் காக்க, உங்கள் தலைமுறை தழைக்க இந்தப் பயிற்சி முகாமில் பங்கு கொள்ளுங்கள். அதற்காக முன் பதிவு செய்யுங்கள்.

விளம்பர பகுதி

புதன், 4 டிச 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon