மின்னம்பலம் மின்னம்பலம்
ஞாயிறு, 25 அக் 2020

கனவை நிஜமாக்கிய மணிரத்னம்: நடிகர் லால் நெகிழ்ச்சி!

கனவை நிஜமாக்கிய மணிரத்னம்: நடிகர் லால் நெகிழ்ச்சி!

இந்தியாவின் முன்னணி நட்சத்திரங்களைக் கொண்டு இயக்குநர் மணிரத்னம் ‘பொன்னியின் செல்வன்’ கதையைத் திரைப்படமாக எடுக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.

இந்த சூழலில் மலையாளம் மற்றும் தமிழ் திரைப்படங்களில் நடித்து வரும் முன்னணி நடிகர் லால் இந்தப் படத்தில் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான தகவலை அவர் சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளார்.இவர் காளை, சண்டக்கோழி உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இது குறித்து ட்வீட் செய்த அவர், “என்னுடைய திரை வாழ்க்கையில் ஒரே ஒரு நபரிடம் மட்டும் தான் திரைப்படத்தில் நடிக்க வாய்ப்பு கேட்டுள்ளேன். அது மணிரத்னம் சாரிடம் தான். அதுவும் நடிகை சுஹாசினி எனக்குப் பழக்கமானவர் என்பதால் பல வருடங்களுக்கு முன்னதாகக் கேட்டிருந்தேன். அதன் பிறகு ‘கடல்’ திரைப்படத்தில் நடிக்க அவர் என்னை அழைத்திருந்தார். ஆனால் வேறு திரைப்படங்களில் நடிக்க ஒப்பந்தம் செய்திருந்ததால் அதில் நடிக்க என்னால் இயலவில்லை. தற்போது எனது கனவு நிஜமாகப் போகிறது. மணிரத்னம் இயக்கும் அடுத்த திரைப்படத்தில் வயதான ஒரு படைவீரனின் கதாபாத்திரத்தில் நடிக்க என்னை அழைத்துள்ளார். அதற்காக குதிரைசவாரி கற்று வருகிறேன்” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் இந்தத் திரைப்படத்தில் அமிதாப்பச்சன், கார்த்தி, ஜெயம்ரவி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா உள்ளிட்டவர்கள் நடிக்கிறார்கள் எனவும் திரைப்படம் இரண்டு பாகங்களாக உருவாகி வருகிறது என்னும் தகவலையும் தெரிவித்துள்ளார்.

புதன், 4 டிச 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon