மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, சனி, 6 ஜுன் 2020

கைரேகையை பாதுகாக்க அடுத்த ஜெனெரேஷன் வந்தாச்சு!

கைரேகையை பாதுகாக்க அடுத்த ஜெனெரேஷன் வந்தாச்சு!

ஸ்மார்ட்ஃபோன்களில் பயன்படுத்தப்படும் in-display Fingerprint Censor எனப்படும், கைரேகை மூலம் ஸ்மார்ட்ஃபோன்களை அன்லாக் செய்யும் தொழில்நுட்பத்தின் அடுத்த தலைமுறையை கண்டுபிடித்திருக்கிறது குவால்கம் நிறுவனம்.

3D Sonic Max என்றழைக்கப்படும் இந்தத் தொழில்நுட்பத்தின் மூலம், முந்தய தொழில் நுட்பமான 3D Sonic censor-ஐ விட பெரிய அளவிலான இடத்தை கைரேகையை பதிவு செய்யலாம். சொல்லப்போனால் இரண்டு கைரேகைகளை ஒரே சமயத்தில் பதிவு செய்து  ஸ்மார்ட்ஃபோனின் பாதுகாப்பினை உறுதி செய்யலாம்.

ஸ்மார்ட்ஃபோன்களின் அளவு ஒவ்வொரு கண்டுபிடிப்பிலும் அதிகரித்துக்கொண்டே செல்வதால், இந்த தொழில்நுட்பம் விரிவடைவதால் பெரிய பிரச்சினை இல்லை என்று சொல்லப்பட்டாலும், மிகப்பெரிய குறைகள் இதில் இருந்தன. சில வகையான டேம்பர் கிளாஸ்களில் இந்த தொழில்நுட்பத்தின் வேகம் குறைவாக இருந்தது.

குவால்கம் நிறுவனத்தின் ஜெனரல் மேனேஜரான அலெக்ஸ் கடௌசியன் இதுகுறித்து பேசியபோது “முன்பை விட ஸ்கேன் செய்யப்படும் இடம் அதிகமாக இருப்பதால், சரியான கைரேகையை துல்லியமாக எடுக்கமுடியும் இதனால் உங்கள் பாதுகாப்பு அதிகரிக்கப்படும்” என்று கூறினார். ஆனால், கைரேகை ஸ்கேன் செய்யப்பட்டு ஃபோன் அன்லாக் செய்யப்படும் வேகத்தில் மாற்றம் இருக்காது என்றே தெரிகிறது. 

புதன், 4 டிச 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon