மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, சனி, 6 ஜுன் 2020

கடன் தர மறுத்த வங்கி மேலாளர் மீது தாக்குதல்!

கடன் தர மறுத்த வங்கி மேலாளர் மீது தாக்குதல்!

கோவையில் கனரா வங்கி கிளைக்குள் நுழைந்து ஏர்கன் மற்றும் கத்தியுடன் இடைத்தரகர், வங்கி மேலாளர் மற்றும் ஊழியர்கள் மீது ஒருவர் தாக்குதல் நடத்தியுள்ளார்.

கோவை, சுங்கம் பகுதியில் கனரா வங்கியின் கிளை செயல்பட்டு வருகிறது. இங்கு நேற்று (டிசம்பர் 3) பிற்பகல் ஒண்டிப்புதூரை சேர்ந்த வெற்றிவேலன் என்பவர், ஏர்கன் மற்றும் சிறிய அளவிலான கத்தியை எடுத்துக் கொண்டு உள்ளே சென்றுள்ளார்.

அப்போது வங்கியிலிருந்த இடைத்தரகர் குணபாலன் என்பவரைக் கடுமையாகத் தாக்கியுள்ளார். இதனைக் கண்ட வங்கி மேலாளர் அவரை தடுக்க வந்துள்ளார். அப்போது வங்கி மேலாளர் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. அப்போது தடுக்க முயன்ற ஊழியர்கள் மீதும் அந்த நபர் தாக்குதல் நடத்தியுள்ளார்.

இதுகுறித்து ரேஸ்கோர்ஸ் காவல் நிலையத்தில் வங்கி மேலாளர் சந்திரசேகர் புகார் அளித்துள்ளார். இதன்பேரில் தாக்குதல் நடத்திய வெற்றிவேலனை, வங்கியிலிருந்த சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் தாக்குதல்களுக்கான காரணம் தெரியவந்துள்ளது.

வெற்றிவேலன், குணபாலன் மூலம் கனரா வங்கியில் கடன் பெற விண்ணப்பித்துள்ளார். இதற்காக அவருக்கு சுமார் ரூ.3 லட்சம் வரை கொடுத்துள்ளார். ஆனால் கடன் பெற்றுத் தராமல் குணபாலன் அலைக்கழித்ததாகக் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த வெற்றிவேலன் நேற்று வங்கிக்குள் புகுந்து தாக்குதல் நடத்தியுள்ளார்.

ஏற்கனவே ஆந்திரா வங்கியில் கடன் பெற்று, அதனை வெற்றிவேலன் சரிவர கட்டவில்லை என்பதால் சிபில் ஸ்கோர் அடிப்படையில் வங்கி மேலாளர் சந்திரசேகர் கடன் வழங்க மறுத்துள்ளார். இதனை வெற்றிவேலனிடம், குணபாலன் தெரியப்படுத்தவில்லை என்றும் சொல்லப்படுகிறது.

புதன், 4 டிச 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon