மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, செவ்வாய், 7 ஜூலை 2020

எஸ்பிஜி வாபஸ்: பிரியங்கா காந்திக்கு பாதுகாப்பு குறைபாடு?

எஸ்பிஜி வாபஸ்: பிரியங்கா காந்திக்கு பாதுகாப்பு குறைபாடு?

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, முன்னாள் தலைவர் ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி ஆகியோருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு பாதுகாப்புக் குழு (SPG) பாதுகாப்பை மத்திய அரசு சமீபத்தில் வாபஸ் பெற்றது. சிஆர்பிஎஃபின் இசட் பிளஸ் பாதுகாப்பு மட்டுமே வழங்கியது.

Spg பாதுகாப்பு வாபஸ் பெற்ற நிலையில், பிரியங்கா காந்தியின் வீட்டுக்குள் பாதுகாப்பை மீறி 6 பேர் நுழைந்துள்ளனர்.

கடந்த 26ஆம் தேதி, டெல்லியில் பாதுகாப்பு நிறைந்த லோதி பகுதியில் இருக்கும் பிரியங்கா காந்தியின் வீட்டுக்குள் அனுமதியின்றி மூன்று இளம்வயது பெண்கள் மற்றும் மூன்று ஆண்கள் என 6 பேர் காரில் வந்துள்ளனர். அவர்கள் பிரியங்கா காந்தியுடன் செல்ஃபி எடுத்துக்கொள்ள விருப்பம் தெரிவித்த நிலையில், பிரியங்காவும் அவர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அன்றைய தினம் யாருக்கும் அப்பாயிண்ட்மென்ட் கொடுக்காத பிரியங்கா காந்தி, அவர்களைக் கண்டு முதலில் அதிர்ச்சியடைந்ததாகவும், பின்னர் அவர்களிடம் நேர்த்தியாகப் பேசி செல்ஃபி எடுத்துக் கொண்டதாகவும் காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. எனினும் பாதுகாப்புகளை மீறி அவர்கள் எப்படி வீட்டுக்குள் நுழைந்தனர் என்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

டெல்லி காவல்துறையினர் மற்றும் சிஆர்பிஎஃப் இடையிலிருந்த குழப்பத்தினால் அந்த 6 பேரும் உள்ளே நுழைந்ததாகக் கூறப்படுகிறது. பிரியங்கா காந்தி அலுவலகம் இந்த சம்பவத்தை உறுதி செய்திருக்கிறது. இதுதொடர்பாக மத்திய பாதுகாப்புப் படையிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. பிரியங்கா காந்திக்குப் பாதுகாப்பு குறைபாடு ஏற்பட்டதாக காங்கிரசார் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

செவ்வாய், 3 டிச 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon