மின்னம்பலம் மின்னம்பலம்
ஞாயிறு, 31 மே 2020

மூண தொட்டது யாரு? இட்லிய சாப்பிட்டது யாரு?: அப்டேட் குமாரு

மூண தொட்டது யாரு? இட்லிய சாப்பிட்டது யாரு?: அப்டேட் குமாரு

‘டேய் குமாரு, விக்ரம் லேண்டர கண்டுபுடிச்சிட்டாங்கடா’னு ஈவினிங் டீக்கடையில ஃப்ரெண்டு ஒருத்தன் கத்தி சொல்றான். ‘அப்பிடியா, அமெரிக்காவா இல்லே ரஷ்யாவா? யாரு கண்டுபுடிச்சாங்க?’னு நானும் ஒரு ஆர்வத்தில கேட்டேன். ‘அது ஏன் குமாரு, இஸ்ரோவானு உனக்குக் கேக்கத் தோணல. நம்ம ஊர்காரங்க மேல உனக்கே நம்பிக்கை இல்லையா? நம்ம தமிழ்நாடு பையன் ஒருத்தர் கண்டுபுடிச்சிருக்காங்கடா’னு சொன்னான். அட செம்ம இல்லேன்னு நானும் ஜாலி ஆயிட்டேன். அப்பிடியே ஃபேஸ்புக்க நோண்டிகிட்டு இருந்தவன் இந்த வீடியோ பாத்தியாடான்னு குயின் டீசரக் காட்டினான். நல்ல வேள இதில ரம்யா கிருஷ்ணன் ஜெ மாதிரி இல்லேன்னா கூட ரம்யா கிருஷ்ணன் மாதிரியாச்சும் இருக்காங்களேன்னு நான் மனசுக்குள்ள நெனச்சுகிட்டேன். தலைவி- குயின், ஜெயலலிதா அம்மா பத்தி ரெண்டு படம் வரப்போகுது. அந்த ஒரு கோடி ரூபா இட்லிய சாப்பிட்டது யாருன்னு கண்டுபுடிக்கிறதுக்காகவே ரெண்டு படத்தையும் பாக்கணும்னு சொல்லிட்டே வீடியோவுக்கு ஒரு லைக் போட்டு விட்டான். நீங்க அப்டேட்ட படிங்க.

செந்திலின்_கிறுக்கல்கள்

ரஜினியாக வந்து அதிசயம் செய்வாய் என எதிர்பார்த்தால் சரவணா ஸ்டோர் ஓனராக வந்து அதிர்ச்சி தருகிறாயே...!

மழை

நட்சத்திரா

இன்னிக்கு ஓடி போய் ஃபேன் ஆஃப் பண்றவங்களாம் யாருனு நெனைச்ச....

வெயில் காலத்துல ஃபேன ஹைல வெச்சி அதுக்கு நேரா இடம் பிடிச்சி படுத்தவிங்க தான்

மெந்நிலா

கோடீஸ்வரர்களாலும் வாங்க முடியாத ஏழைகளின் மிகப்பெரிய சொத்து..!!

" புன்னகை "

Mrs.Vetti

கஷ்டப்பட்டு ஒரு பிரச்சனைய கப்பல்ல ஏத்தி அனுப்புனா, வேகமா இன்னொரு பிரச்சனை ராக்கெட்ல வந்து இறங்குது.

இதுதான் வாழ்க்கை.

காகா ராதாகிருஷ்ணன் மற்றும் சிவாஜி கணேசன்

நட்சத்திரா

கோபத்தில் பிசையப்படும் சப்பாத்தி மாவில் மென்மையும் சுவையும் அதிகம் தான்

மயக்குநன்

2021 தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில், ரஜினியின் ஆன்மீக அரசியல் எழுச்சி பெற்று அதிசயம் நடக்கும்!- அர்ஜூன் சம்பத்.

அப்படி நடந்தா 'எட்டாவது' அதிசயம்... இல்லைன்னா, 'எட்டாத' அதிசயம்..!

ஜால்ரா காக்கா

சுவரின் உரிமையாளர் சிவ சுப்ரமணியன் கைது

கைய கொடுங்க சார் நல்ல வேலை எங்க கொத்தனார் ,சித்தாள் கைது பன்னுவீங்கலோன்னு நினைச்சுட்டேன்

எனக்கொரு டவுட்டு

கஸ்டமர் கேருக்கு கால் பண்ணினா நமக்கு தெரிய வர்ற விஷயம் என்னான்னா நம்ம கீ போர்டுல நல்லா ஒர்க் ஆகுதுங்குறதுதான்..!

காளையன்

எனை நோக்கிப் பாயும் தோட்டா-வெங்காயம்;

வெங்காயம்-எனை நோக்கிப் பாயும் தோட்டா;

ஒருவரி_விமர்சனம்

ச ப் பா ணி

புயலுக்கு பின் "பள்ளி விடுமுறை"

கோழியின் கிறுக்கல்

தோல்விக்கு பின் என்னிடம் காரணம் கேட்காமல் இருப்பது,

நீங்கள் தரும் ஆறுதலை விட பலமடங்கு ஆறுதலை தரும்!!

இதயவன்

அதிமுகவுக்கு கமல் ஒரு பொருட்டல்ல!- அமைச்சர் காமராஜ்.

தமிழக மக்களும் தான?!!

கோழியின் கிறுக்கல்

நாசாவுக்கு சொன்னதால் அவர் பெயர் வெளியே வந்தது,

இங்கன சொல்லி இருந்தால் ஒரு மந்திரி வந்து தாந்தான் அதை "விக்ரம் லாண்டரை" கண்டுபிடித்தேன் என்றிருப்பார்!!

இதயவன்

என்னங்கடா இது காலையில எந்திரிச்சு எல்லாரும் நியூஸ் பார்க்குறாங்க...

மழைக்கால பரிதாபங்கள்...

லீவு வருமா

காஸ்ட்லி கிப்ட்

ஜோக்கர்

"நான் சொல்வது சரி" என்றிருக்கும் வரை எந்த சிக்கலும் இல்லை,

"நான் சொல்வது மட்டும்தான் சரி" என்கிற எண்ணம்தான் உறவில் விரிசல் விழ முதல் காரணம்...!!

-லாக் ஆஃப்

செவ்வாய், 3 டிச 2019