மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, வெள்ளி, 14 ஆக 2020

பிரியங்கா சோப்ரா ஜிந்தாபாத்: அப்டேட் குமாரு

பிரியங்கா சோப்ரா ஜிந்தாபாத்: அப்டேட் குமாரு

‘அண்ணே, பிரியங்கா சோப்ரா காங்கிரஸ்ல சேர்ந்திட்டாங்களா, அப்போ இனிமே நடிக்க வரமாட்டாங்களாண்ணே’னு டீக்கடைல தம்பி ஒருத்தன் சோகமா கேக்குறான். ஏன்டா, உனக்கு இந்த திடீர் சந்தேகம்னு கேட்டா, அது இல்லண்ணே, டெல்லியில நடந்த காங்கிரஸ் மீட்டிங் ஒண்ணுல எம்.பி ஒருத்தர், பிரியங்கா சோப்ரா சிந்தாபாத்ன்னு கோஷம் போட்டிருக்காரே. அதான் கேட்டேங்கிறான். என்னடா இது புதுக்கதையா இருக்கேனு நான் யோசிச்சிட்டு இருந்தேன். அதுக்குள்ள டீக்கடை அண்ணா, ‘அடேய் தம்பி, அந்த ஆளு பிரியங்கா காந்தின்னு சொல்றதுக்கு பதிலா, பிரியங்கா சோப்ரானு சொல்லியிருக்காரு. நீ பதற்றப்படாத, அவங்க நடிக்க வருவாங்க’ன்னு சொல்றாரு. அதுக்கு அப்புறம் தான் பயபுள்ள டீய நிம்மதியா குடிக்கிறான். அவனுக்கு அவன் கவலை. ஒரு வேள இத பாத்து பிரியங்கா சோப்ரா காங்கிரஸ்ல சேர்ந்திருவாங்களோ? நான் அந்த வீடியோவ தேடிகிட்டு வர்றேன். நீங்க அப்டேட்ட படிங்க.

sujiprabhu

குஜராத்தில் உள்ள நித்தியானந்தா ஆசிரமம் இழுத்து மூடப்பட்டது பக்தர்கள் வெளியேற்றம் அகமதாபாத் ஆட்சியர் அதிரடி நடவடிக்கை!..

சிங்கிள் பசங்க சாபம் சும்மா விடுமா மொமெண்ட் !...

விஷ்வா

அன்பாக பேசி

பழகிய ஆயிரம்

வார்த்தைகளை கூட

கோபத்தில் பேசும்

ஓரிரு வார்த்தைகள்

அழித்து விடுகிறது ....!

அபிவீரன்

டிசம்பர் வந்தா போதும் சின்ராசு‌ மக்கள மிரட்ட கிளம்பிடுவான்

மழை🌧️

முகிலன்

வேலையை சுலபமாக்க உருவாக்கப்பட்ட இயந்திரங்களே நம்மை பெரும் சோம்பேறிகளாக்கி விடுகிறது.!

பழைய சோறு

கிளிக்கு

கோவைப்பழம் பிடிக்கும்

என தேடி அலைந்து

வாங்கி கொடுத்தவருக்கு

கூண்டு பிடிக்காது என்பது

ஏன் தெரியாமல் போனது..

இதயவன்

தமிழகத்தில் பாஜக காலூன்றும் வரை பங்களிப்பேன்- நடிகர் ராதாரவி

கட்சிமாறினாலும் டயலாக் மாறலையே மேன் ?!!!

mohanram.ko

'ஆத்துல போட்டாலும் அளந்து தான் போட வேண்டும்', எத்தனை செ. மீ மழை என்று..

எமகாதகன்

இலவசங்களுக்கு மட்டுமல்ல

பிறர் கேட்காமலே

நாம் செய்யும் உதவிகளுக்கும்

மரியாதை கிடைப்பதில்லை

Parama Guru.N

எச்சரிக்கை அறிவிப்புகளும்

வண்ணம் பூசிக்கொள்கின்றன

மழைக்காலங்களில்.. !

பாட்டி வைத்தியம்

தினமும் காலை வேளையில் நெல்லிக்காய் சாற்றைக் குடித்தால், உடலில் தேவையற்ற கொழுப்புகளை நீக்கி, உடல் எடையைக் குறைக்க முடியும். வைட்டமின் ‘சி’ ரத்தக்குழாய்களில் படிந்திருக்கும் கொலஸ்ட்ராலை சுலபமாகக் கரைத்திடும். எனவே, மாரடைப்பைத் தவிர்க்கலாம்.

mohanram.ko

பெண்ணின் பார்வை பட்டதும்,

இழுத்த இழுப்புக்கெல்லாம்

வந்திடுது, தொப்பை

ஜோக்கர்

"குறையை கூட நிறை"யாய் காட்டும் திறமை காதலுக்கும்,

"நிறையை கூட குறை"யாய் காட்டும் திறமை கல்யாணத்திற்கும் வாய்த்து விடுகிறது.

கோழியின் கிறுக்கல்

புகைப்படங்களுக்கு மட்டுமே காலத்தை உறைய வைக்கும் திறமை உள்ளது!!

சவேதி

நீங்க

ரெம்ப "பாவம் "

என்பவரிடம் மயங்கி

விடாதீர்கள்...

உங்களை

"பலகீனப்படுத்துவதில் "

முதன்மையானவர்கள் ...

நாட்டுப்புறத்தான்

வெளித்தோற்றத்தை வைத்து யாரையும் எடை போடக்கூடாது என்பதை அனுபவப்பூர்வமாக உணர்ந்த நாள் இன்று...

"பெரிய" வெங்காயம் கிலோ 100 ரூபாய்...

"சின்ன" வெங்காயம் கிலோ 150 ரூபாய்...

செந்திலின்_கிறுக்கல்கள்

வறண்டு போன குளங்களை கருணையுடன் நிரப்பிக் கொண்டிருக்கிறார் வருண பகவான்..!

Update News 360

கடலை மிட்டாய்: வேர்க்கடலை உடலுக்கு நன்மை செய்யும் கொழுப்பை உள்ளடக்கியது. வெல்லம் இரும்புச் சத்து நிறைந்தது. இதைத் தொடர்ந்து சாப்பிட்டால் இரத்தச்சோகை வராது. உடல் வளமாக நலமாக இருக்கும்

mohanram.ko

விசேஷத்தை வைத்து விட்டு, உறவினர்களின் 'வரவு'க்காகக் காத்திருக்க வைப்பது, மொய் பணம்

-லாக் ஆஃப்

திங்கள், 2 டிச 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon