மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 2 டிச 2019

உள்ளாட்சித் தேர்தல் தேதி இன்று அறிவிப்பு?

உள்ளாட்சித் தேர்தல் தேதி இன்று அறிவிப்பு?

உள்ளாட்சித் தேர்தல் தேதி தொடர்பாக மாநிலத் தேர்தல் ஆணையர் பழனிசாமி தகவல் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் கடந்த மூன்று ஆண்டுகளாக உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படாத சூழல் நிலவி வருகிறது. அக்டோபர் இறுதிக்குள் உள்ளாட்சித் தேர்தல் அட்டவணை வெளியிடப்படும் என உச்ச நீதிமன்றத்தில் அளித்த உறுதிக்கேற்ப தேர்தலுக்கான ஆயத்தப் பணிகளை செப்டம்பர் மாதம் முதல் மாநிலத் தேர்தல் ஆணையம் தொடங்கியது. எனினும் அக்டோபர் இறுதிக்குள் தேர்தல் தேதியை அறிவிக்கவில்லை. மீண்டும் நீதிமன்றத்தில் அவகாசம் கோரியது.

உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில், டிசம்பர் 2ஆம் தேதி உள்ளாட்சித் தேர்தலுக்கான அட்டவணை வெளியிடப்பட வாய்ப்புள்ளதாக மாநிலத் தேர்தல் ஆணையம் தெரிவித்திருந்தது. இந்த வழக்கு டிசம்பர் 13ஆம் தேதி விசாரணைக்கு வரவுள்ளது. இதனிடையே மேயர், நகராட்சி, பேரூராட்சித் தலைவர் பதவிகளுக்கு மறைமுகத் தேர்தல் நடத்தப்படும் எனத் தமிழக அரசு அரசாணை வெளியிட்டது. தற்போது, உள்ளாட்சித் தேர்தலுக்கான அனைத்துப் பணிகளையும் மாநிலத் தேர்தல் ஆணையம் நிறைவு செய்துவிட்டது.

இந்த நிலையில் உள்ளாட்சித் தேர்தல் தேதி இன்று (டிசம்பர் 2) அறிவிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதுதொடர்பாக மாநிலத் தேர்தல் ஆணையர் பழனிசாமி நேற்று ஊடகங்களுக்கு அளித்த பேட்டியில், “தேர்தல் அறிவிப்புக்கான பணிகள் நிறைவு பெற்றுவிட்டன. ஆகவே, நாளையில் (இன்று) இருந்து வரும் 7ஆம் தேதிக்குள் கண்டிப்பாக உள்ளாட்சித் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுவிடும்” என்று கூறியுள்ளார்.

தொகுதி மற்றும் வார்டு மறுவரையறை, சுழற்சிமுறை, புதிதாகப் பிரிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு வார்டு வரையறை உள்ளிட்ட சட்ட நடைமுறைகளைப் பூர்த்தி செய்த பிறகே உள்ளாட்சித் தேர்தலை அறிவிக்க வேண்டுமென உச்ச நீதிமன்றத்தில் திமுக மனுத் தாக்கல் செய்துள்ளது. இதுதொடர்பான வழக்கு இரண்டு வாரங்களுக்குப் பிறகு பட்டியலிடப்பட உள்ளது. இதனால் உள்ளாட்சித் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டாலும், நடைபெறுமா என்ற கேள்வி உள்ளது.

கிச்சன் கீர்த்தனா: வீட்டிலேயே ஹோட்டல் சுவை: வத்தக்குழம்பு

3 நிமிட வாசிப்பு

கிச்சன் கீர்த்தனா: வீட்டிலேயே ஹோட்டல் சுவை: வத்தக்குழம்பு

கிச்சன் கீர்த்தனா: வீட்டிலேயே ஹோட்டல் சுவை: வடகறி

4 நிமிட வாசிப்பு

கிச்சன் கீர்த்தனா: வீட்டிலேயே ஹோட்டல் சுவை: வடகறி

காவலருடன் வாக்குவாதம்: வழக்கறிஞர் விரைவில் கைது!

4 நிமிட வாசிப்பு

காவலருடன் வாக்குவாதம்: வழக்கறிஞர் விரைவில் கைது!

திங்கள் 2 டிச 2019