Hதமன்னாவின் நவம்பர் ஸ்டோரி!

public

தமன்னாவின் முதல் வெப் சீரிஸான ‘தி நவம்பர் ஸ்டோரி’யின் முதல்கட்டப் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது.

முன்னணி நாயகியாக வலம்வரும் தமன்னா விகடன் தயாரிக்கும் வெப் சீரிஸ் ஒன்றில் நடிக்க ஒப்பந்தமானார். ஹாட் ஸ்டார் இந்த சீரிஸை வெளியிடுகிறது. சிவா மனசுல சக்தி, வால்மீகி போன்ற படங்களையும், தொலைக்காட்சி சீரியல்களையும் தயாரித்துவரும் விகடன் குழுமம் இதன் மூலம் வெப் சீரிஸ் தயாரிப்பிலும் இறங்கவுள்ளது.

ராட்சசன் திரைப்படத்தை இயக்கிய ராம் குமாரிடம் உதவி இயக்குநராக பணியாற்றிய ராம் சுப்ரமணியம், இந்த வெப் சீரிஸ் மூலம் இயக்குநராக அறிமுகமாகவுள்ளார். ‘தி நவம்பர் ஸ்டோரி’ எனத் தலைப்பிடப்பட்டிருக்கிறது.

இந்த நிலையில், ‘தி நவம்பர் ஸ்டோரி’யின் முதல்கட்டப் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. இது குறித்து தமன்னா தன் ட்விட்டர் பக்கத்தில் கூறும்போது, “முதல்கட்டப் படப்பிடிப்பு நிறைவடைந்தது. இது எனது முதல் தமிழ் வெப் சீரிஸ். அடுத்தகட்டப் படப்பிடிப்புக்காகக் காத்திருக்கிறேன்” என்றார்.

க்ரைம் த்ரில்லராக உருவாகும் இந்த சீரிஸ், குற்றம் புரிந்த தந்தையைக் காக்க போராடும் ஒரு மகளின் கதையாக உருவாகி வருகிறது. இதில், அப்பாவாக ஜி.எம்.குமாரும், மகளாக தமன்னாவும் நடிக்கின்றனர்.

வெப் சீரிஸில் நடிக்கும் அனுபவம் குறித்து ஆங்கில ஊடகத்தில் பேட்டியளித்த தமன்னா, “டிஜிட்டல் பிளாட்ஃபார்ம்களில் நடிப்பது ஒரே சமயத்தில் ஐந்து படங்களில் நடிப்பதற்குச் சமம். ஏற்கனவே நடிகையாக அறியப்படும் என்னைப் போன்ற கலைஞர்களுக்கும் இது சவாலானது தான். தரமான உள்ளடக்கத்தைப் பார்வையாளர்கள் இன்று பயன்படுத்த விரும்புகிறார்கள். உங்கள் கதை அசலாகவும், சமகாலத் தன்மையுடனும் மற்றும் ரசிகர்களுடன் தொடர்புப்படுத்தக்கூடிய வகையில் இருந்தால், பார்வையாளர்களிடமிருந்து நிச்சயம் பாராட்டு கிடைக்கும்” எனக் கூறினார்.�,”

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *