மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, புதன், 23 செப் 2020

உள்ளாட்சித் தேர்தலுக்காக பொங்கல் பரிசா? அமைச்சர்

உள்ளாட்சித் தேர்தலுக்காக பொங்கல் பரிசா? அமைச்சர்

உள்நோக்கத்துடன் பொங்கல் பரிசை வழங்கவில்லை என்று அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் விளக்கம் அளித்துள்ளார்.

உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்புகள் இன்னும் சில நாட்களில் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், தேர்தல் பணிகள் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளன. இதனிடையே வார்டு வரையறை சட்ட நடைமுறைகளை பூர்த்திசெய்துவிட்டே உள்ளாட்சித் தேர்தலை நடத்த வேண்டுமென உச்ச நீதிமன்றத்தில் திமுக வழக்கு தொடர்ந்துள்ளது. தேர்தலை சந்திக்கத் தாங்கள் தயாராக இருப்பதாகவும், திமுக அஞ்சுவதாகவும் முதல்வர் எடப்பாடி குற்றம்சாட்டினார்.

இதனிடையே பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அரிசி ரேசன் கார்டு வைத்திருக்கும் அனைத்து வீடுகளுக்கும் பொங்கல் பரிசாக ரொக்கப்பணம் ரூ.1,000 மற்றும் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படும் என முதல்வர் அறிவித்தார். அத்துடன் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் திட்டத்தை கடந்த நவம்பர் 29ஆம் தேதி துவக்கிவைத்தார். எனினும் பொங்கலுக்கு 45 நாட்களுக்கு மேல் இருக்கும் நிலையில் தற்போது பொங்கல் பரிசு வழங்குவது ஏன் என்று கேள்வி எழுப்பிய எதிர்க்கட்சிகள், உள்ளாட்சித் தேர்தலை மனதில் வைத்தே வழங்கியிருப்பதாகவும் குற்றம்சாட்டியிருந்தனர்.

இந்த நிலையில் இதுதொடர்பான கேள்விக்கு பதிலளித்த தமிழ்வளர்ச்சித் துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன், “இரண்டு நாட்களில் தேர்தல் அறிவிப்பு வெளியிடப்பட்டாலும், அடுத்த இரண்டு வாரங்களில் உள்ளாட்சித் தேர்தல் நடந்தாலும் அதனை எதிர்கொள்ளும் திறன் அதிமுகவுக்கும் தோழமைக் கட்சிகளுக்கும் உள்ளது. உள்ளாட்சித் தேர்தலை இழுத்தடிக்க வேண்டும் என்று எந்த எண்ணமும் அதிமுக அரசுக்கு இல்லை. இழுத்தடிக்கும் அதிகாரமும் எங்களுக்கு கிடையாது” என்று தெரிவித்தார்.

ஞாயிறு, 1 டிச 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon