மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, புதன், 23 செப் 2020

பேச்சுலர் சமையல்: கீரை ஆம்லெட்!

பேச்சுலர் சமையல்: கீரை ஆம்லெட்!

ஆம்லெட் என்றாலே முட்டை தான் முதலில் நினைவிற்கு வரும். ஆனால் சைவப்பிரியர்களுக்கும் சுவைத்து மகிழும் வண்ணம் முட்டையே இல்லாத ஆம்லெட் கூட செய்ய இயலும். எளிய பொருட்களைக் கொண்டு மிக விரைவில் செய்து முடிக்கக்கூடிய இந்த கீரை ஆம்லெட் சத்தானது மட்டுமின்றி சுவையானதும் கூட. இன்றைய பேச்சுலர் சமையலில் கீரை ஆம்லெட் செய்யும் முறையைப் பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்:

கடலை மாவு - ஒரு கப்

ராகி மாவு - கால் கப்

ஏதேனும் ஒரு வகைக் கீரை - சிறிதளவு

வெங்காயம் - 1

பச்சை மிளகாய் - 2

இஞ்சி - சிறு துண்டு

மஞ்சள் தூள் - ஒரு சிட்டிகை

உப்பு, எண்ணெய் - தேவையான அளவு

செய்முறை:

கடலை மாவு, ராகி மாவு ஆகியவற்றை ஒரு பாத்திரத்தில் எடுத்து அதனுடன் உப்பு மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து ஒன்றாகக் கலந்து கொள்ள வேண்டும். அதனுடன் பொடியாக நறுக்கிய கீரை, வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி ஆகியவற்றைச் சேர்த்து தேவையான அளவு நீர் விட்டு நன்கு கலக்கவும். தோசைக் கல்லைக் காய வைத்து, அதில் சிறிதளவு எண்ணெய் தடவி, கலந்து வைத்திருக்கும் மாவை சிறு ஆம்லெட்டுகளாக ஊற்ற வேண்டும். அதன் சுற்றிலும் எண்ணெய் விட்டு வேக வைத்து திருப்பிப் போட்டு எடுத்தால் சுவையான கீரை ஆம்லெட் தயார். தேங்காய் சட்னி இதற்கு கச்சிதமான காம்பினேஷனாக இருக்கும்.

சமையல் குறிப்பு: ஆதிரை வேணுகோபால்

ஞாயிறு, 1 டிச 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon