மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, செவ்வாய், 4 ஆக 2020

என்னது எதிர்காலமா, வாய்ப்பில்லை ராஜா! :அப்டேட் குமாரு

என்னது எதிர்காலமா, வாய்ப்பில்லை ராஜா! :அப்டேட் குமாரு

நான் பாட்டுக்கு உக்காந்து ஆஃபீஸ்ல வேலை பாத்துக்குட்டு இருந்தேன்(சத்தியமா வேலை தான் பாத்தேன்). டீக்கடைக்கார பையன் ஃபோன் பண்ணான். ‘அண்ணே செம மேட்டர் ஒண்ணு இருக்கு வாயேன்’ அப்டின்னான். வீடியோ பண்றதுக்கு நல்ல மேட்டர் ஒண்ணு யோசிச்சு சொல்ல சொல்லியிருந்தேன். சரின்னு கிளம்பிப் போய் என்னடான்னு கேட்டா, ‘அண்ணே, ஒவ்வொரு கட்சிலயும் இருக்க ஆளுங்களாலயே அந்த கட்சிக்கு கெட்ட பெயர் கிடைக்குறது யார் யாருன்னு ஒரு லிஸ்ட் ரெடி பண்ணி வெச்சிருக்கேன்’ அப்டின்னான். சரின்னு, டீ கிளாஸை கைல வாங்கிக்கிட்டு சொல்லுடான்னு சொன்னதும், ‘நீ ஒவ்வொரு கட்சி பேரா சொல்லிக்கிட்டே வா’ அப்டின்னான்.

பா.ஜ.க-வுக்கு... “பிரக்யா ஃப்ரம் உ.பி”

காங்கிரஸுக்கு... “ராகுல் காந்தி”

அதிமுகவுக்கு... “ராஜேந்திர பாலாஜி”

திமுகவுக்கு... “உதயநிதி”

அமமுகவுக்கு... “சசிகலா”

தேமுதிகவுக்கு... “பிரேமலதா”

பா.ம.க.வுக்கு... “அன்புமணி”

நாம் தமிழருக்கு... “சீமான்”

சீமான் பேரை சொன்னதும் எனக்கு டென்சனாகிருச்சு. எலே, அவர்தாம்டா அந்த கட்சிக்கு ஓனரு. அவராலயே கெட்ட பேரா என்ன சொல்றன்னு கேட்டா “நீ இன்னும் அந்த இட்லி கதையை கேக்கலயான்றான். சரிடா, மத்த கட்சில நீ சொல்ற பேரெல்லாம் தான் அந்தந்த கட்சிகளோட எதிர்காலமாவே பார்க்கப்படுறாங்க அப்டின்னா ‘வாய்ப்பில்லை ராஜா’ன்னுட்டு போறான். இந்த லிஸ்ட்ல எதெல்லாம் சரியா இருக்குன்னு நீங்க பாருங்க. நான் போய் சீமான் அண்ணனோட ஸ்பீச்சை பாத்துட்டு வர்றேன்.

Pachai Perumal.A.

அற்புதம் நடக்கும்னார்.

அடுத்தநாளே நித்தியானந்தா சாமியார் வெளிநாட்டுக்கு ஒடிட்டார். இதுவே பெரிய அற்புதம்தானே?

Raju N

SPB'ல்லாம், லிரிக்ஸ மனசுக்குள்ள காறித் துப்பிக்கிட்டே பாடியிருப்பாருல்ல..!?

Hasan Kalifa

சகிப்புத்தன்மையை பற்றி கேள்வி கேட்பதாக இருந்தால் முதலில் கணவன் என்ற கேரக்டரிலிருந்து தொடங்குங்கள்.

கோழியின் கிறுக்கல்!!

எவரையும் உருகி உருகி நேசிக்காதீர்கள்!!

பிறகு நீங்கள் உருக்குலைந்து போவதற்கு வாய்ப்புகள் அதிகம்!!!

கப்பல் வியாபாரி

2k kids க்கும் ரீச் ஆகணும்னு விவேக்ணாவ எழுத வச்சாங்களாம்..

சொரூபா

பாக்க பாக்க பிடிக்கறது.. கேக்க கேக்க பிடிக்கறது..

நம்ம வாழ்க்க இப்படியே போய்டுமா

ஜோக்கர்...

"ஆலையில்லாத ஊருல இலுப்பைபூ சர்க்கரை" ங்கிற பழமொழி விவேக் மாம்ஸ்க்கு தான் நல்லா பொருந்துது. வரிகள் எல்லாம் ஆசம் ரகம்.

பேரு வெக்கலங்க

தம்மாத்தூண்டு பேட்டரிக்கு பிளஸ் மைனஸ் இருக்கும்போது இவ்வளவு பெரிய மனுசனக்கு இருக்காதா

தரமான-கெட்டவன்

காற்று எப்போதும் ஒரே பக்கம் வீசுவதில்லை.

ஆனால், சூரியன் தினமும் ஒரே இடத்தில் தான் தோன்றி மறைகிறது......!!!!

கப்பல் வியாபாரி

அடுத்த படத்துல இமான் கன் கன் கன் ரஜினிமுருகன்னு டோன்ல இப்பவே ரெடி பண்ணிருப்பாரு..

மஞ்சப்பை

கவலையை மறந்து சிரித்தல் என ஒன்று சொல்கிறார்கள்.

ஆனால் நான் சிரிக்கும் போது கூட கவலைப் பட மறப்பதில்லை.

-பேயோன்

𝔻𝕖𝕒𝔻𝕤𝕙𝕠𝕥

பாட்டு புடிச்சு கேளுங்க இல்ல விடுங்கடா.. விஜய் பேன்ஸ்லாம் வெறித்தனம் கேளு அஜித் பேன்ஸ்லாம் டுருக்குடக்கிற கேளு சிம்பு பேன்ஸ் உங்களுக்கு கடைசிய நடிச்ச சிம்பு படம் நாபகம் இருந்தா அதுல எதாவுது ஒன்னு கேட்டுட்டு சாவு... சும்மா நச நசன்னு...

ஆனந்த்

இனி ஒவ்வொரு எம்.எல்.ஏ.க்களின் வேண்டுதல் எந்தக் கட்சிக்கும் தனி மெஜாரிட்டி கிடைக்கக்கூடாது என்பதாகத்தான் இருக்கும்....

சொகுசு விடுதி வாழ்க்கை, கோடிகளில் பணம், அமைச்சர் பதவி என ராஜ வாழ்க்கை தானே....

ஜோக்கர்

"உடல்நிலை" சரியில்லாத போதுதான் புரிகிறது,

"உபயோகிமில்லாத பாகம்" என்று உடம்பில் ஏதுமில்லை என்று..!!!

-லாக் ஆஃப்.

புதன், 27 நவ 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon