எமிரேட்ஸ் பயணிகளுக்குத் தமிழக முந்திரி ட்ரீட்!

public

உலக முந்திரி தினத்தை முன்னிட்டு, எமிரேட்ஸ் ஜெட் விமானங்களில் பயணிகளுக்கு சுவைமிக்க முந்திரிகளால் தயாரிக்கப்பட்ட உணவுகள் வழங்கப்பட்டுள்ளன. இதில் முதல் வகுப்பு பயணிகளுக்குத் தமிழக முந்திரிகளால் தயாரிக்கப்பட்ட உணவு வகைகள் கொடுக்கப்பட்டுள்ளன.

சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடிக்கும் நட்ஸ் வகைகளில் ஒன்று முந்திரி. இன்று உலக முந்திரி தினம் கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு வளைகுடாவைத் தளமாகக் கொண்ட எமிரேட்ஸ் பயணிகள் ஜெட் விமானம், தனது பயணிகளுக்கு முந்திரிகளால் தயாரிக்கப்பட்ட உணவுகளைக் கொடுத்துச் சிறப்பித்துள்ளது.

இதுகுறித்து எமிரேட்ஸ் விமானம், முந்திரியைப் பெருமளவில் உற்பத்தி செய்யும் இந்தியா, 86 நாடுகளில், 160 இடங்களுக்கு அதன் சரக்குகளை ஏற்றிச் செல்லும் வகையில் விமான போக்குவரத்தை உருவாக்கியுள்ளது.

இந்தியா ஒவ்வொரு ஆண்டும் 80,000 டன் முந்திரியை ஏற்றுமதி செய்கிறது, இதன் மதிப்பு 900 மில்லியன் டாலருக்கும் அதிகமாகும். இந்த வருவாயில் சுமார் 22 சதவீதம் எமிரேட்ஸ் சார்ந்த ஐக்கிய அரபு அமீரகத்துக்கு (யுஏஇ) ஏற்றுமதி செய்யப்படுகிறது.

எனவே இத்தினத்தைக் கொண்டாடும் வகையில், எங்கள் பயணிகளுக்கு வறுத்த முந்திரிகள் சிற்றுண்டியாக வழங்கப்பட்டது. மேலும் முந்திரிகளால் தயாரிக்கப்பட்ட பல பட்டர் சிக்கன், கானு பாதாம் தியா மேச்சர், பொங்கல், சஷி பனீர் ஆகிய சுவையான உணவுகளும் வழங்கப்பட்டன.

முதல் வகுப்பு மற்றும் பிசினஸ் கிளாஸ் பயணிகளுக்குத் தமிழ்நாட்டின் முந்திரிகளில் தயாரிக்கப்பட்ட வறுத்த இந்திய மசாலா உணவுகள் வழங்கப்பட்டன என்று தெரிவித்துள்ளது. இந்திய விவசாயிகளுக்கு வணிக வாய்ப்புகளுக்கான ஆர்வத்தையும், விழிப்புணர்வையும் ஏற்படுத்தும் வகையில் இந்த முயற்சி எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எமிரேட்ஸ் குழுமம் தற்போது உலகளவில் 13,700க்கும் மேற்பட்ட இந்தியர்களை பணியில் வைத்துள்ளது. இது மொத்த பணியாளர்களில் 21 சதவிகிதம் என்பது குறிப்பிடத்தக்கது

�,”

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *