மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, வியாழன், 6 ஆக 2020

வேலைவாய்ப்பு : மத்திய தொழில் பாதுகாப்புப் படையில் பணி!

வேலைவாய்ப்பு : மத்திய தொழில் பாதுகாப்புப் படையில் பணி!

மத்திய தொழில் பாதுகாப்புப் படையில் காலியாக உள்ள தலைமைக் காவலர் பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள விளையாட்டு வீரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியிடங்கள் : 300

பணியின் தன்மை: தலைமைக் காவலர்

ஊதியம் : ரூ.25,500- ரூ.81,100/-

வயது வரம்பு : 01.08.2019 தேதியின்படி 18-30க்குள் இருக்க வேண்டும்.

கல்வித் தகுதி: 12ஆம் வகுப்பு தேர்ச்சி. மாநில, தேசிய, சர்வதேச விளையாட்டுகளில் பங்கு பெற்றிருக்க வேண்டும்.

உடற் தகுதி: ஆண்கள் குறைந்தபட்சம் 167 செ.மீ உயரமும், பெண்கள் 153 செ.மீட்டர் உயரமும் பெற்றிருக்க வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம் : ரூ.100/- பெண்கள், எஸ்சி/எஸ்டி பிரிவினருக்குக் கட்டணத்தில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

கடைசித் தேதி : 17.12.2019

மேலும் விவரங்களுக்கு இந்த லிங்க்கை கிளிக் செய்து தெரிந்துகொள்வோம்,

ஆல் தி பெஸ்ட்

வெள்ளி, 22 நவ 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon