மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, வெள்ளி, 14 ஆக 2020

பின்தொடர்ந்து தொந்தரவு: போலீஸில் நடிகை பார்வதி புகார்!

பின்தொடர்ந்து தொந்தரவு: போலீஸில் நடிகை பார்வதி புகார்!

வழக்கறிஞர் என தன்னை அறிமுகப்படுத்தி கொண்ட நபர் தன்னை பின் தொடர்ந்து தொந்தரவு செய்வதாக மலையாள நடிகை பார்வதி, கேரள போலீஸில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் பேரில், இந்தியத் தண்டனைச் சட்டத்தின் பிரிவு 354 டி (பின்தொடர்தல்) உள்ளிட்ட பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

சமூக வலைதளங்கள் மூலம் தன்னை வழக்கறிஞர் என்று அறிமுகப்படுத்திக் கொண்ட கிஷோர் என்ற நபர், முதலில் பார்வதியின் சகோதரருக்குத் தொடர்பு கொண்டு இது பார்வதி குறித்த அவசரமான விஷயம் என்று பேசியுள்ளார். அக்டோபர் 7ஆம் தேதி தான் தனக்குத் தெரிவிக்கப்பட்டதாக போலீஸில் பார்வதி கூறியுள்ளார்.

இதுகுறித்து பார்வதி சில ஸ்கீர்ன் ஷாட்களையும் போலீஸில் சமர்ப்பித்துள்ளார். அதில், சம்பந்தப்பட்ட நபர், முதலில் பார்வதி சகோதரரிடம் அவர் எங்கிருக்கிறார் என்று விசாரித்துள்ளார். அந்த சமயத்தில் பார்வதி அமெரிக்காவில் இருந்துள்ளார். ஆனால் அந்த நபர் பார்வதி கொச்சியில் இருப்பதாகவும், சில மாஃபியா கும்பலில் அவர் சிக்கியிருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

தயவு செய்து அவரை மீட்டு வாருங்கள், அவரை பற்றி பலர் பேசுகின்றனர். என் நண்பர்கள் பலரும் அவருடன் தொடர்பில் உள்ளனர் என்றும் தெரிவித்துள்ளார்.

அந்த நபர் சொல்வதை அவரது சகோதரர் நிராகரித்தபோது, அவர் வாட்ஸ்அப் மற்றும் பேஸ்புக் மெசஞ்சரில் பல அவதூறு செய்திகளைப் பார்வதி குறித்துப் பரப்பியுள்ளார். பார்வதி காதலித்துக் கொண்டிருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

அவரது சகோதரர் அந்த நபரிடம் பேசியதை நிறுத்திய போதிலும், அவர் பார்வதி குடும்பத்தினருக்குத் தொல்லை கொடுப்பதை நிறுத்தவில்லை. இதனைத் தொடர்ந்து பார்வதி தந்தையைத் தொடர்புகொண்டு பேசியுள்ளார். அவரது தந்தையும் அந்த நபருடனான பேச்சுவார்த்தையை நிறுத்திய போது, பார்வதி வீட்டருகே குடியிருப்பவர்களிடையே பேசியுள்ளார். பார்வதி பல ஆண்களிடம் பேசிக் கொண்டிருப்பதாகவும் அதில் ஒருவர் தனது நண்பர் என்றும் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பார்வதி பின்தொடருதல் உள்ளிட்ட குற்றங்களை அவ்வளவு பெரிதாக யாரும் கருத்தில் கொள்வதில்லை. ஆனால் இதனால் பல பெண்கள் பாதிக்கப்படுகின்றனர். இது ஆபத்தானவை என்று தனது புகாரில் தெரிவித்துள்ளார். இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

வெள்ளி, 22 நவ 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon