மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, சனி, 15 ஆக 2020

கிச்சன் கீர்த்தனா: மோர் ரசம்

கிச்சன் கீர்த்தனா: மோர் ரசம்

நமது வயிறு 15 நாட்களுக்கு ஒருமுறையாவது காலியாக இருக்க வேண்டும். இதனையொட்டித்தான் அமாவாசை, பெளர்ணமி என விரதங்கள் எல்லாம் வரையறுக்கப்பட்டதாகச் சொல்லப்படுகிறது. விரதமிருப்பதால் வயிறு சுத்தமாகிறது. ஜீரண உறுப்புகள் சீராகிறது என்கிறார்கள் சித்த மருத்துவர்கள். இந்த அடிப்படையில்தான் எல்லா மதங்களுமே விரதத்தைத் தூக்கிப்பிடிக்கின்றன. சபரிமலை ஐயப்பனுக்கு மாலையிட்டு ஒரு மண்டலம் எனப்படும் 48 நாட்கள் விரதமிருந்து மலைக்கு போய் வருகிறார்கள். இப்படிப்பட்ட நேரங்களில் நம் ஆரோக்கியத்தைச் சீராக வைத்துக்கொள்ள இந்த மோர் ரசம் உதவும்.

என்ன தேவை?

தயிர் – 1 கப்

தேங்காய்த்துருவல் – கால் கப்

பச்சை மிளகாய் - 3

வெந்தயம், பெருங்காயம் – தலா கால் டீஸ்பூன்

கடுகு, சீரகம் – தலா அரை டீஸ்பூன்

மல்லித்தழை, கறிவேப்பிலை – சிறிதளவு

நெய், உப்பு – தேவையான அளவு

எப்படிச் செய்வது?

தயிரை ஒரு கப் தண்ணீர், உப்பு சேர்த்துக் கரைத்து வைத்துக் கொள்ளவும். தேங்காய்த்துருவல், பச்சை மிளகாய், வெந்தயம் ஆகியவற்றை நைசாக அரைக்கவும். வாணலியில் நெய் விட்டு கடுகு, சீரகம், கறிவேப்பிலை, பெருங்காயம் தாளித்து, அரைத்ததைச் சேர்த்துப் பிரட்டி, கரைத்த தயிரில் விடவும். மல்லித்தழையால் அலங்கரித்துப் பரிமாறவும்.

குறிப்பு

கொதிக்க விட தேவையில்லை.

நேற்றைய ரெசிப்பி: சிவப்பு அவல் புட்டு

வியாழன், 21 நவ 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon