மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, வெள்ளி, 7 ஆக 2020

சிதம்பரம் ஜாமீன் மனு: அமலாக்கத் துறைக்கு நோட்டீஸ்!

சிதம்பரம் ஜாமீன் மனு: அமலாக்கத் துறைக்கு நோட்டீஸ்!

ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரத்தின் ஜாமீன் மனுவுக்கு பதில் அளிக்கும்படி அமலாக்கத் துறைக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் ப.சிதம்பரம் மீது சிபிஐ மற்றும் அமலாக்கத் துறை தனித்தனியாக வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றன. சிபிஐ விசாரணை முடிவடைந்த நிலையில் திகார் சிறையில் அடைக்கப்பட்டிருந்த அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டது.

ஆனால், சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் அவரை அமலாக்கத் துறை கைது செய்தது. இதில் தனக்கு ஜாமீன் வழங்கக் கோரி அவர் டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார். ஆனால் அவருக்கு ஜாமீன் மறுத்துக் கடந்த 15ஆம் தேதி நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

இதை எதிர்த்து சிதம்பரம் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு மனுத் தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு தலைமை நீதிபதி பாப்தே முன்பு இன்று விசாரணைக்கு வந்தது, அப்போது, சிதம்பரத்தின் ஜாமீன் மனுவுக்கு வரும் 25ஆம் தேதி பதில் அளிக்க அமலாக்கத் துறைக்கு நோட்டீஸ் அனுப்பி உத்தரவிட்ட நீதிபதி வழக்கை அன்றைய தினத்துக்கு ஒத்தி வைத்தார்.

புதன், 20 நவ 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon