மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, சனி, 15 ஆக 2020

கிச்சன் கீர்த்தனா: சிவப்பு அவல் புட்டு

கிச்சன் கீர்த்தனா: சிவப்பு அவல் புட்டு

கார்த்திகை மாதம் முதல் நாள் ஐயப்ப சுவாமிக்கு மாலை அணியும் விரத நாள் தொடக்கம், கார்த்திகை சோமவாரம் எனப் பல்வேறு சிறப்புகள் இந்த மாதத்தில் உண்டு. இந்த விரத நாட்களில் படைக்கப்படும் நைவேத்தியங்களில், நமக்கு ஆரோக்கியம் அளிக்கும் சிவப்பு அவல் புட்டு முக்கியமானது.

என்ன தேவை?

சிவப்பு அவல் – ஒரு கப்

வெல்லம் – கால் கப்

தேங்காய்த் துருவல் – ஒரு டேபிள்ஸ்பூன்

நெய் – 2 டீஸ்பூன்

ஏலக்காய்த்தூள் – கால் டீஸ்பூன்

முந்திரி - 10

எப்படிச் செய்வது?

அவலைச் சுத்தப்படுத்தி நெய்யில் நன்றாக வறுக்கவும். வெல்லத்தைத் தூளாக்கி, அவலுடன் சேர்த்து, மிக்ஸியில் கொரகொரவெனப் பொடிக்கவும். இதை ஆவியில் வேகவைத்து எடுத்து, இதோடு தேங்காய்த் துருவல், ஏலக்காய்த்தூள் சேர்த்துக் கிளறி, நெய்யில் வறுத்த முந்திரியைச் சேர்த்து நைவேத்தியமாகப் படைக்கலாம்.

நேற்றைய ரெசிப்பி: கதம்ப இட்லி

புதன், 20 நவ 2019

chevronLeft iconமுந்தையது