மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 20 நவ 2019

முதல் பக்க செய்தியா? கடைசி பக்க மேட்டரா? :அப்டேட் குமாரு

முதல் பக்க செய்தியா? கடைசி பக்க மேட்டரா? :அப்டேட் குமாரு

இன்னைக்கு நியூஸ் என்ன தம்பின்னு காலைல டீக்கடை பையன்கிட்ட கேட்டேன். அவன் என்னடான்னா, ரஜினி-கமல் கூட்டணி, உள்ளாட்சி தேர்தல், மேயர் தேர்தல்னு வரிசையா சொன்னான். பக்கத்துல டீ குடிச்சிட்ருந்த ஒருத்தர், ஏன்பா திமுக பஞ்சமி நிலம் மேட்டர், காயத்ரி ரகுராம்-விசிக மேட்டர், திருவள்ளுவருக்கு காவி டிரஸ் போட்டது இதெல்லாம் பாக்றதில்லையா அப்டின்னார். அதுக்கு அந்த பையன் “அண்ணே, நான் மக்களுக்குத் தேவையான நியூஸ் பத்தி பேசுறேன். நீங்க பொழுதுபோக்குறதுக்காகவும், நாம இருக்குறத யாருக்காவது நிரூப்பிக்கணும்னும் தேவையில்லாத பிரச்சினைகளை உருவாக்குறவங்களை பத்தியும் பேசுறீங்க. நான் சொல்றது நியூஸு, நீங்க சொல்றது மேட்டர். அதுக்கும் இதுக்கும் வித்தியாசம் இருக்குண்ணே” அப்டின்னுட்டான். அவர் உடனே சமாளிக்கிறதுக்காக “அட எனக்கும் தெரியும்பா. நீ சொல்றது முதல் பக்க செய்தி. நான் சொல்றது கடைசி பக்க செய்தி. ரெண்டுமே தேவை தான” அப்டின்னுட்டு அவசரமா கிளம்புனாப்ல. பாஸ் அந்த கிளாஸை மறந்துட்டுப் போறீங்களே. இந்த கிளாஸ் வாங்குறதுக்கே ரொம்ப போராட வேண்டியதிருந்துது. குடுத்துட்டு போங்கன்னு சொன்னதும். ஆமா, சாரி பாஸ் அப்டின்னுட்டு போய்ட்டார்.

Arunan Kathiresan

"தீயசக்தியின் உருவம்தான் தொல்திருமா": எச் ராஜா.

ஒரு மக்கள் தலைவரை, எம் பி யை இப்படி வசைபாடுவது

மனுவாத ஆணவத்தின் வெளிப்பாடு.

பாமரன் கீச்சுகள்

90 வயதிலும் தன் மீது தொடரப்பட்டது பொய் வழக்கு என தெரிந்தாலும் நேரில் ஆஜராகி நீதிமன்றத்தையே சிறை பிடித்தவர் தலைவர் கலைஞர். - வழக்கு தள்ளுபடி.!!

ஊரில் இல்லாத சமயத்தில் விசாரணை என வீட்டிற்கு வந்தவர்களை, ஊர் திரும்பிய உடன் மகன் உதயநிதியையும் அழைத்துக்கொண்டு ஆணையர் அலுவலகத்திற்கு நேரில் ஆஜாரகி "என்ன விசாரணை" என கேட்டவர் தளபதி ஸ்டாலின். - எந்த விசாரணையும் இல்லை.

வாய்தாவும் வாங்க மாட்டேன் , ஓடியும் ஒளிய மாட்டேன் ஆதாரங்களை நம்பி நானே வாதாடுகிறேன் என ஒற்றை ஆளாக நின்று 2ஜி என்ற இமாலய அவதூறை அடித்து நொறுக்கியவர் அண்ணன் ஆ.ராசா. இப்போ மற்றுமொரு அவதூறு வழக்கு. அமைப்புச்செயலாளர் ஆலந்தூர் பாரதி நேரில் ஆஜராகி ஆணையத்தை அதிரவைத்து வழக்கு தொடர்ந்தவருக்கும் அரசுக்கும் சவால் விடுகிறார். வாய்தா வாங்கி ஓடவும் செய்யாது, வழக்குக்கு அஞ்சி ஓடியதும் கிடையாது. அவதூறுகளை அடித்து நொறுக்கி அசராமல் நிற்கும் அசூரன்.

Vivekanandan

பிராமணாள் யாரயாச்சும் அருவாளால வெட்டி இருகாளா, கலவரம் பண்ணிருகாளான்னு SVeசேகர் சொன்னத பத்தி என்ன நினைக்கிறீங்க?

காயத்ரி தன் பிரச்சினைய எப்டி லாவகமா ரெண்டு சாதிகளுக்கிடையிலான கலவரமாக்க ட்ரை பண்றான்னு பாருங்க.2000 வருசமா இப்டி சிண்டு முடிஞ்சுதான் அவா சந்தோசமா வாழ்ந்துட்டு இருக்கா!

சஹாரா

இசையமைப்பாளர்களுக்கெல்லாம்... ஒலிமயமான எதிர்காலம்தானே?!

ச ப் பா ணி

மன்னிப்பு என்பது தவறுக்காகவும்,

Sorry என்பது சமாதானத்திற்காகவும் கேட்கப்படுகிறது.

ரஹீம் கஸ்ஸாலி

ரஜினியும் கமலும் இணைந்தால் கமல்தான் முதல்வர் வேட்பாளர்! - ஸ்ரீப்ரியா

முதல்ல கட்சி ஆரம்பிச்சவர் என்ற கணக்கில் சொல்வாங்க போல...

ஜோக்கர்..

நம் வீட்டிற்கு உறவினர்கள் வருகையின் போதும்,

உறவினர் வீட்டிற்கு நாம் செல்லும் போதும்,

நம் குழந்தைகளிடம் உள்ள "அம்பி" கேரக்டர் நமக்கு தெரியவருகிறது..!!!

ѕтαℓιи кαятнιк

அதிமுகவில் மட்டுமே அடிமட்ட தொண்டனும் முதல்வராக முடியும்..

ஓபிஎஸ் எப்படி முதல்வரானாரு..?

அம்மா ஊழல் கேஸ்ல உள்ள போனப்போ முதல்வராக்குனாங்க

எடப்பாடி எப்படி முதல்வரானாரு??

சின்னம்மா அதே ஊழல் கேஸ்ல உள்ள போகும் போது முதல்வராக்குனாங்க

Dhivya Srinivasan

கும்பாபிஷேகத்துக்கு வசூல் பண்ண வீடு வீடாக ஏறி இறங்கும்போது இந்துவாக தெரியும் நீ, பூஜையின் போது கோபுரத்தில் நிற்பவனுக்கு சூத்திரனாய் தெரிவாய்.

தனக்கு பிரச்சனையின்போது "இந்துக்களே ஒன்றிணையுங்கள்"னு ஏவி பிழைப்பு நடத்துவதை உணராத வரை நீ அவனுக்கு அடிமை சூத்திரன் தான்.

Arun Manoharan

இராணுவத்திற்காக தயாரிக்கின்ற தோள்பை செய்யும் ஆர்டர் வைல்ட் கிராஃப்ட் தனியார் நிறுவனத்துக்கு குடுக்கப்பட்டுள்ளது

பாதுகாப்புத் துறையின் கீழ் உள்ள ஒரு தொழில்துறை அமைப்பான இந்தியன் ஆர்ட்னன்ஸ் factory தற்போது அத்தகைய பைகளை தயாரிக்கிறது எதற்காக தனியாருக்கு கொடுக்கப்படுகிறது?

ஊர்க்காவலன்™

நமக்கு தனிமையை தருவதில் பெரிய "சிக்கல்"உண்டு "ஹெட்செட்"க்கு

கோழியின் கிறுக்கல்!!

நீ விரும்பியது போலவே நம் திருமணம் ஒரே மண்டபத்தில், ஒரே நாளில் நடந்தது,

வெவ்வேறு வருடங்களில்!!

ட்விட்டர்

நாம ஆதாரத்தை பத்திரிகையாளர்கள் கிட்ட பப்ளிக்கா காட்டணுமாம்...

இவங்க ஆதாரத்தைக் கேட்டா ஈமெயில் பண்ணுவாங்களாம்...

யுகராஜேஸ்®

நடிகர் அஜித் கண்ணியமானவர்; தொழில் பக்தி மிக்கவர்- ஜெயக்குமார்#இந்த கரிசனம் எல்லாம் அவரு உங்கள் ஆட்சியை எதிர்த்து பேசாதவரைக்கும் தானே அமைச்சரே..!!

மணி (தன்)

டூவீலர்க்கு 300 ரூபாய்க்கு பெட்ரோல் போடுறவன பணக்காரனாவும்...

காருக்கு 500 ரூபாய்க்கு பெட்ரோல் போடுறவன ஏழையாவும்

பார்க்கும் இந்த சமூகம்...

-லாக் ஆஃப்.

வேலைவாய்ப்பு: சென்னை ஐஐடியில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: சென்னை ஐஐடியில் பணி!

நீர்வரத்துக்குத் தடை: மேய்ச்சல் நிலமாக மாறிய ஏரி - விவசாயிகள் ...

3 நிமிட வாசிப்பு

நீர்வரத்துக்குத் தடை: மேய்ச்சல் நிலமாக மாறிய ஏரி - விவசாயிகள் வேதனை!

பெற்றோரை இழந்த குழந்தைகளை அடையாளம் காண வேண்டும் : ஒன்றிய அரசு ...

3 நிமிட வாசிப்பு

பெற்றோரை இழந்த குழந்தைகளை அடையாளம் காண வேண்டும் : ஒன்றிய அரசு

புதன் 20 நவ 2019