மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, வியாழன், 28 ஜன 2021

பிங்க் பால் டெஸ்ட் போட்டி: விற்றுத் தீர்ந்த டிக்கெட்டுகள்!

பிங்க் பால் டெஸ்ட் போட்டி: விற்றுத் தீர்ந்த டிக்கெட்டுகள்!வெற்றிநடை போடும் தமிழகம்

இந்தியா- வங்கதேசம் இடையேயான பிங்க் பால் டெஸ்ட் போட்டி கொல்கத்தாவின் ஈடன் கார்டன் மைதானத்தில் வருகிற 22ஆம் தேதி தொடங்குகிறது. இந்த பகலிரவு போட்டியின் டிக்கெட் விற்பனையும் களைக்கட்டிய நிலையில், முதல் நான்கு நாட்களின் டிக்கெட்டுகள் விற்றுத் தீர்ந்துவிட்டதாக பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி தெரிவித்துள்ளார்.

வங்கதேச அணியுடன் இந்தியா விளையாடும் முதல் பகலிரவு கிரிக்கெட் டெஸ்ட் போட்டி நடைபெறும் ஈர்டன் கார்டன் மைதானம், இந்தியாவின் மிகப்பெரியா மைதானங்களில் ஒன்று. இது சுமார் 67ஆயிரம் பேர் அமர்ந்து பார்க்கும் அளவுக்குத் திறன் கொண்டது.

இந்த போட்டியை காண்பதற்காக டிக்கெட் விற்பனை நேற்று தொடங்கியது. கிரிக்கெட் ரசிகர்கள் போட்டி போட்டுக் கொண்டு டிக்கெட்டுகளை வாங்கியுள்ளனர். பிங்க் பால் டெஸ்ட் போட்டி நாளை தொடங்கவுள்ள நிலையில், பிசிசிஐ தலைவரும், , இந்திய அணியின் முன்னாள் கேப்டனுமான சவுரவ் கங்குலி நேற்று மும்பையில் இதுகுறித்து பேசியுள்ளார்.

நிகழ்வின் அதிகாரப்பூர்வ சின்னங்களான ‘பிங்கு-டிங்கு’ஐ அறிமுகம் செய்து வைத்துப் பேசிய அவர், இந்த போட்டியைக் காண ரசிகர்கள் ஆர்வமாக உள்ளனர். முதல் நான்கு நாட்களுக்கான அனைத்து டிக்கெட்டுகளும் விற்றுத் தீர்ந்துவிட்டது என்று தெரிவித்துள்ளார். வங்க தேச பிரதமர் ஷேக் ஹசினா, உள்துறை அமைச்சர் அமித் ஷா, மேற்குவங்க முதல்வர் மம்தா பேனர்ஜி ஆகியோர் நிகழ்ச்சியைக் காண ஈர்டன் கார்டன் மைதானத்துக்கு வருகை தரவுள்ளனர்.

போட்டிக்காக மைதானம் தயாராகி வரும் நிலையில், பிசிசிஐ இன்று தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், ஈடன் கார்டன் மைதானம் பிங்க் கலர் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளன. அதே போல் மாபெரும் பலூன் மற்றும் அரங்கத்தைச் சுற்றிப் பல கிரிக்கெட் கருப்பொருள் அடங்கிய சுவரோவியங்களும் வரையப்பட்டுள்ளது.

புதன், 20 நவ 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon