மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, சனி, 15 ஆக 2020

போன் ஒட்டுக் கேட்பு: பத்து அமைப்புகளுக்கு மட்டும்தான் அதிகாரமா?

போன் ஒட்டுக் கேட்பு: பத்து அமைப்புகளுக்கு மட்டும்தான் அதிகாரமா?

அண்மையில் காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி உள்ளிட்ட பல அரசியல் தலைவர்களின் வாட்ஸ் அப் அழைப்புகள் உளவு மென் பொருள் செயலியின் மூலம் ஒட்டுக் கேட்கப்படுவதாக புகார்கள் எழுந்தன.

இந்தப் பிரச்சினை பற்றி நாடாளுமன்றத்தில் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு உள்துறை அமைச்சர் கிஷன் ரெட்டி அளித்த விளக்கத்தில்,

“மத்திய அரசின் தகவல் தொழில்நுட்பச் சட்டம் 2000 பிரிவு 69 -இன் படி நாட்டின் இறையாண்மை, ஒருமைப்பாட்டைக் காப்பாற்றுவதற்காக தொலைபேசி, அலைபேசி, உள்ளிட்ட எந்த ஒரு கணினி கருவியின் தகவல் பரிமாற்றத்தையும் கண்காணிக்கவும், தகவல்களை ஆராயவும் மத்திய, மாநில அரசுகளுக்கு அதிகாரம் உள்ளது.

மத்திய அரசு சார்பில் மத்திய புலனாய்வுத் துறை, அமலாக்க இயக்குநரகம் மற்றும் என்.ஐ.ஏ, மத்திய நேரடி வரிகள் வாரியம், போதைப் பொருள் கட்டுப்பாட்டு வாரியம், டெல்லி போலிஸ் உள்ளிட்ட 10 மத்திய ஏஜென்சிகளுக்கு தகவல் பரிமாற்றங்களைக் கண்காணிக்க அங்கீகாரம் அளிக்கப்பட்டுள்ளது” என்று கூறினார். மேலும் அவர், “ யாரையும் கண்காணிப்பதற்கு முன் மேற்குறிப்பிட்ட அமைப்புகளின் தலைவர்கள் மத்திய உள்துறை செயலாளரின் ஒப்புதலைப் பெறவேண்டும். மாநில அரசின் விஷயத்தில் சம்பந்தப்பட்ட மாநில உள்துறை செயலாளரும் அங்கீகரிக்கின்றனர். , "என்று அவர் ஒரு கேள்விக்கு எழுதப்பட்ட பதிலில் கூறினார்.

இந்த பதில் பற்றி நாடாளுமன்ற லாபியில் சில எம்பி.க்கள், “மத்திய, மாநில அரசுகளின் உள்துறைச் செயலாளர்களின் ஒப்புதலின் பேரில் பல பேருடைய தொலைபேசி டேப் செய்யப்படுகிறது என்பதை மத்திய உள்துறை அமைச்சகம் வெளிப்படையாகத் தெரிவித்துள்ளது. ஆனபோதும் உள்துறைச் செயலாளர்களுக்கு அப்பால் தகவல் தொடர்புத் துறை அமைச்சர்களே கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டதெல்லாம் நடந்திருக்கிறது. இதற்கு முன் தகவல் தொழில் நுட்பத் துறை அமைச்சராக பதவி வகித்த ஒருவர் தனது மாநிலத்தைச் சேர்ந்த முதல்வரின் அலைபேசியையே கண்காணித்தார் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்” என்று விவாதித்துக் கொண்டிருந்தனர்.

புதன், 20 நவ 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon