மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, வெள்ளி, 22 ஜன 2021

எங்கள் ஆசை !

 எங்கள் ஆசை !வெற்றிநடை போடும் தமிழகம்

விளம்பரம்

வழக்கம்போல ஒரு சனிக்கிழமை நொச்சிக்குப்பக் கடற்கரையில் மீன் வாங்க சென்றபோது, வழக்கத்திற்கு மாறாக அங்கே ஒரு கட்டமைப்பு இருந்தது. ஒவ்வொரு வாரமும் கபடி போட்டிகள் நடக்கும் காலி கிரவுண்டுக்கு அருகில் உயர் தரத்தில் ஒரு வாலிபால் விளையாட்டுத்திடல் அமைக்கப்பட்டிருந்தது. போஸ்ட் நடப்பட்டு, வலை கட்டப்பட்டு, புது பந்துகளுடன் இளசுகள் உற்சாகத்துடன் விளையாடிக்கொண்டிருந்தனர். சுற்றிலும் வேலியிடப்பட்ட ஒரு விளையாட்டுத்திடல். ஊர் திருவிழாப்போல கூட்டம் கூடியிருந்தது. பல்வேறு வண்ண ஜெர்சிகளுடன் விளையாட்டு வீரர்கள் பரபரத்துக்கொண்டிருந்தனர். கடல் அலைகளைக் கடந்து கட்டற்ற உற்சாக அலை அக்கடற்கரையிலேயே மையம் கொண்டிருந்தது. மீன் வாங்குவதை விட, இவ்வாறான கட்டுக்கடங்காத உற்சாகத்திற்கான காரணத்தை தேடுவதே முதன்மை வேலையாகப் பட்டது.

அது ஒரு வரலாற்று நிகழ்வாம். . 5 வருடங்களுக்கு முன்பு, சாந்தோம் மாணவர்கள் வாலிபால் விளையாட வருகிறார்கள் என்றால் அந்தக்களமே ரணகளமாகிவிடும். மாநில சாம்பியன்களான அவர்களை ஹீரோக்கள் போல குழந்தைகள் கொண்டாடி மகிழ்ந்தனர். சாந்தோம் விளையாட்டு குழுவின் முக்கிய ஆட்டக்காரர்கள் அனைவரும் நொச்சிக்குப்பத்தைச் சேர்ந்தவர்கள். ஆனால், நொச்சிக்குப்பத்தில் வாலிபாலுக்கென ஒரு விளையாட்டுத் திடல் இருந்ததில்லை.

அந்த வேதனையை சாந்தோம் வாலிபால் குழுவினருள் ஒருவரான நொச்சிக்குப்பத்தைச் சேர்ந்த பிரதீபின் வார்த்தைகளில் கேட்டபோது கண்கள் வேர்த்தது. “நாங்க மாவட்ட அளவிலும், மாநில அளவிலும் பலதடவை முதலிடம் புடிச்சிருக்கோம். பெரிய பெரிய தலைவர்கள்கிட்டெல்லாம் பரிசுகள் வாங்கியிருக்கோம். ஆனா அப்போலாம் மனசுக்குள்ள ஒரு வருத்தம் இருந்துட்டே இருக்கும். இத்தனை ஆயிரம் பேர் பாக்குற விளையாட்ட எங்கள பெத்தவங்க பாக்கமுடியலையேங்குற வருத்தம். கடலை நம்பி வாழுறவங்கள விளையாட்டு நடக்குற ஊருக்கெல்லாம் கூட்டிட்டு போகமுடியல. இத்தனை வருஷமா நாங்க விளையாடுறத எங்கள பெத்தவங்க பாத்ததில்ல. இப்போ எங்களோட வாழ்நாள் ஆசை நிறைவேறியிருக்கு! அதுக்கு காரணம் வருண் அறக்கட்டளை. நாங்க ஆடுறத முதல்முறை பாத்த எங்க அப்பா அம்மாவை பாத்து எங்களுக்கு கண் கலங்கிடுச்சு. நாங்க ஆடுறதைப் பாத்து அவங்களும் கண் கலங்கிட்டாங்க.” எனும்போதே அவரின் கண்களிலும் நீர் நிறைந்தது.

அப்போதுதான் வாலிபால் குழுவினரின் ஜெர்சிகளில் இருந்த ’வருண் அறக்கட்டளை’ எனும் வார்த்தைகள் வர்ணிப்புடன் தென்பட்டது. “கபடி டோர்னமெண்ட் நடத்தும்போது, நொச்சிக்குப்ப இளைஞர்கள் எங்ககிட்ட வாலிபால் டோர்னமெண்டும் நடத்தித் தர முடியுமானு கேட்டாங்க. வாலிபாலுக்கு இதுவரை அங்க ஒரு மைதானமே இருந்ததில்லை. அந்த நாள் இரவே மணல் கொட்டி, கபடி கிரவுண்டுக்கு பக்கத்துலையே ஒரு பிட்ச் ரெடி பண்ணோம் . ஆனா அடுத்த ஒரு வாரத்துக்கு மழை. மழை நின்னவுடனே பிட்ச்-ஐ ரெடி பண்ணி, சுத்திலும் வலை போட்டு கிரவுண்ட ரெடி பண்ணிட்டோம். அந்த வீரர்கள் கேட்ட மாதிரியே இப்போ டோர்னமெண்டும் நடத்தியாச்சு. நாங்களே எதிர்பாக்காத அளவிற்கு அத்தனை குழுக்கள் வந்து விளையாடியது. காவல்துறை விளையாட்டு குழுக்கள் ரெண்டும் கலந்துக்கிட்டது. இத்தனையும் செஞ்சு குடுத்த வருண் சார், அன்னைக்கு பரிசு குடுக்க வரல. கடமையை செய் பலனை எதிர்பாக்காதேன்னு அவர்பாட்டுக்கு சத்தமில்லாம நிறைய வேலைகள் செஞ்சிட்டிருக்காரு. இந்த விளையாட்டு வீரர்கள் முகத்துல இருக்கும் சந்தோஷம் எல்லாமே அவருக்குத்தான் சமர்ப்பணம்.” என்றார் வருண் அறக்கட்டளையின் ஒருங்கிணைப்பாளர் ருஷாந்த்.

நொச்சிக்குப்பத்தைச்சேர்ந்த பொற்செல்வன் பேசும்போது, “இது சாதாரண டோர்னமெண்ட் மாதிரி இல்லைங்க. ஒவ்வொரு டீமும் அசாதாரணமான திறமை இருக்கவங்க. ஒரு வோர்ல்ட் கப் கிரிக்கெட் மேட்ச் எவ்வளவு விறுவிறுப்பா நடக்குமோ, அப்படியான விறுவிறுப்போட இந்த போட்டி நடந்து முடிஞ்சது. இதுல திருவான்மியூரைச் சேர்ந்த ஹரி மெமோரியல் டீம் மிகச்சிறப்பாக ஆடி வெற்றிக்கோப்பை வாங்குனாங்க. அந்த டீம்ல விளையாண்ட தியாகு என்ற வீரரோட திறமையை பார்த்து எங்களுக்கு வாயடைச்சுபோச்சு. நொச்சிக்குப்பத்தைச் சேர்ந்த ’ஸ்பெல் பவுன்ஸ்’ டீம் ரன்னரானாங்க. கடைசி ஆட்டத்துல தோத்தாலும், சொந்த ஊர்ல இருக்க எல்லாரும் அவங்களோட ஆட்டத்தை பாத்து ரசிச்சதே அவங்களுக்கு மிகப்பெரிய வெற்றியா இருந்துச்சு.” என்றவர் இறுதியாக இப்படி முடித்தார்.

“இதுக்கு காரணமான வருண் அறக்கட்டளைக்கு நன்றி மட்டும் சொல்லி நிறுத்திக்க முடியாது. ஏன்னா, அவங்க இன்னும் எங்களுக்கு ஏராளமான உதவிகள் செய்ய தயாரா இருக்காங்க. அந்த வரத்தை பயன்படுத்தி வறுமையில இருக்கும் எங்க விளையாட்டு வீரர்களுக்கு நல்ல எதிர்காலம் கிடைக்கணும் என்பதுதான் எங்க எல்லாரோட ஆசையும்! “

உங்கள் கனவுகளை நனவாக்க வரமானது வருண் அறக்கட்டளை என்ற பெயரில் வந்திறங்கியிருக்கிறது!

வாழ்ந்துவிடுங்கள்!

விளம்பர பகுதி

திங்கள், 18 நவ 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon