மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, வியாழன், 28 ஜன 2021

உங்கள் குழந்தைகளை பற்றி அளவுக்கதிகமாக கவலை படுகிறீர்களா?

  உங்கள் குழந்தைகளை பற்றி அளவுக்கதிகமாக கவலை படுகிறீர்களா?வெற்றிநடை போடும் தமிழகம்

விளம்பரம்

காவேரி மருத்துவமனை

இதைப் படிக்கும் பெரும்பாலான நேரங்களில் இந்த கேள்விக்கு உங்களுக்கு பதில் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. எனவே உங்களுக்குள் இருக்கும் இந்த வழக்கத்திற்கு அதிகமான அக்கறை அல்லது கவலை குறித்த அறிகுறிகள் பற்றி தெரிந்துகொள்ளுங்கள்.

அக்கறை என்றால் உங்கள் குழந்தையின் மீதிருக்கும் அன்பும் அவர்களுக்கு நீங்கள் தர வேண்டிய சுதந்திரமும் என புரிந்துகொள்ளுங்கள். அதே நேரம் அளவுக்கதிகமான அக்கறை என்று சொல்லி உங்கள் கட்டுப்பாட்டிலேயே நீங்கள் அவர்களை வைத்திருப்பது எதிர்மறை விளைவுகளையே தரும்.

ஒரு பெற்றோராக உங்கள் குழந்தையின் பாதுகாப்பை கருதி நீங்கள் அவ்வாறு செய்வதாக எண்ணிக்கொண்டிருந்தால் அது உங்களுக்கு எதிராகத் திரும்பும் வாய்ப்புகள் உள்ளது. எனவே எந்த ஒரு விபரீத விளைவும் நிகழ்வதற்கு முன் இதுபோன்ற அளவுக்கதிகமான பாதுகாப்புணர்வு இருப்பதற்கான அறிகுறிகளை பற்றி தெரிந்துகொள்ளுங்கள்.

அவர்கள் எங்கு சென்றாலும் கூடவே செல்வது : நீங்கள் எப்போதும் உங்கள் குழந்தைகள் பின்னால் அவர்கள் பாதுகாப்பு கருதி சென்றால் நீங்கள் அளவுக்கதிகமாக கவலை கொள்ளும் பெற்றோராக இருக்க வாய்ப்புள்ளது. உங்கள் குழந்தைகள் தங்களுக்கு நம்பிக்கையுள்ள வேறு சிலருடன் அல்லது குடும்ப உறுப்பினர்களுடனோ வெளியில் சென்றால் அது பல்வேறு கவலைகள் மற்றும் தடைகளை ஏற்படுத்தினால் நீங்கள் அதிகம் கவலைகொள்பவராக இருக்கலாம்.

அவர்களை அளவுக்கதிகமாக கேள்விகள் கேட்கிறீர்களா?

ஒரு பொறுப்பான பெற்றோராக உங்கள் குழந்தைகளின் வழக்கமான தினசரி செய்யக்கூடிய செயல்களை அறிவீர்கள். எனினும் அவர்கள் செய்யும் ஒவ்வொரு செய்கையையும் அவற்றின் விவரங்களையும் மிகவும் உன்னிப்பாக உற்று நோக்கினால் அது பிரச்சனையாக வாய்ப்புள்ளது.

இதுவும் ஒரு அளவுக்கதிகமான பாதுகாப்புணர்வைக் குறிக்கும் ஒரு அறிகுறி என்பதுடன் உங்கள் குழந்தைகள் மீது உங்களுக்கிருக்கும் நம்பிக்கையின்மையாகவும் ஒரு தவறான அறிகுறியாகவும் குழந்தைகளால் பார்க்கப்படும்.

பல்வேறு பாதுகாப்பு வளையங்கள் தருவது : உங்கள் குழந்தைகளை பொத்திப் பொத்தி வளர்த்தால் அவர்கள் வெளியுலகை புரிந்துகொள்ள இயலாமல் போவதற்கு வாய்ப்பு இருக்கிறது. உங்கள் குழந்தைகள் தங்கள் வளர்ச்சிப்பாதையில் இருப்பதால் அவர்கள் பல்வேறு விதமான மனிதர்களுடன் பழகவேண்டியுள்ளது. நண்பர்களை உருவாக்கிக் கொள்வதும் பல்வேறு செயல்களில் தங்களை ஈடுபடுத்திக்கொண்டு வாழ்வின் சாராம்சத்தை புரிந்து கொள்ளவேண்டியது அவர்களுக்கு மிகவும் அவசியம்.

அவர்களுக்கென்று தனிமையை மறுப்பது : சில வேளைகளில் குழந்தைகள் உங்களிடம் சில விஷயங்களைப் பகிர்ந்துகொள்ள விரும்பாமல் தங்கள் அறைக்கதவை தாழிடவோ அல்லது மேஜைகளைப் பூட்டி வைக்கவோ செய்வர். நீங்கள் அவர்களுக்குத் தனிமையை வழங்கி ஒரு மனிதனாக அவர்களின் தேவையை உணரவேண்டும். அவர்களுக்கும் தனிப்பட்ட சிந்தனைகளும் கருத்துக்களும் இருக்கும் என்பதுடன் அவர்கள் அவை அனைத்தையும் உங்களிடமோ அல்லது வேறு எவரிடமோ கூட கூறவேண்டும் என்பதில்லை. குழந்தைகளின் தனிமைக்கு மதிப்பளிக்காமல் இருப்பது உங்களை அதிக எச்சரிக்கையுணர்வு கொண்ட பெற்றோராகக் காட்டும்.

நீங்கள் அவர்கள் முடிவு செய்வதை அனுமதிப்பதில்லை : உங்கள் குழந்தைகள் தங்கள் முடிவுகளை தாங்களே எடுப்பதற்கு நீங்கள் தடையாய் இருந்தால் வாழ்வின் முக்கிய திறமைகளில் அவர்கள் பின்தங்க நேரிடலாம். அவர்களால் முடிவுகளை எடுக்க இயலாமல் போகலாம். அவர்களுக்கு எதிர்காலத்தை பற்றிய அல்லது வாழ்வை மாற்றிப் போடக்கூடிய முக்கிய முடிவுகளை எடுப்பதில் சிக்கல் ஏற்படலாம். இதனால் அவர்களுக்கு தன்னம்பிக்கையும் சுயமரியாதையும் எதிர்காலத்தில் குறைய வாய்ப்புகள் உள்ளன.

உங்கள் குழந்தைகளை தோற்க விடுவதில்லை : எந்த ஒரு தோல்வியும் வருத்தத்தையும் சோர்வையும் தரும் என்பதில் எந்த ஐயமும் இல்லை. ஆனால் உண்மை என்னவென்றால் வாழ்வில் ஏதோ ஒரு சமயத்தில் நாம் தோல்வியை சந்தித்தே ஆகவேண்டும். அந்த சமயத்தில் மீண்டும் மீண்டும் அவர்களை நிர்பந்தப் படுத்துவதோ அல்லது அவர்கள் அதை செய்ய உதவ முற்படுவதோ அவர்களுக்குப் படிப்பினையைத் தராது. நீங்கள் எடுத்துக் கூறிய பின்பும் அவர்கள் கேட்கவில்லையென்றால் அவர்களே நிலைமையை சமாளிக்க விட்டுவிடுங்கள். இதனால் அடுத்த முறை உங்கள் குழந்தை கொஞ்சமாவது பொறுப்புடன் செயல்படும் என நிச்சயமாகக் கூறலாம்.

தோல்விகளை சந்திக்க அனுமதித்தால் மட்டுமே அதனை எதிர்கொள்ள எதிர்வரும் காலங்களில் அவர்கள் தயாராவார்கள். அவர்களின் பிரச்சனைகளைத் தீர்க்க நீங்கள் செல்லாதீர்கள்!! இதுவும் ஒருவகையில் அதிக அக்கறை கொள்ளும் பெற்றோரின் அறிகுறிதான். ஒரு கணக்குப் பாடத்தில் உள்ள விடையை அறிய உங்கள் குழந்தை முற்படும்போது நீங்கள் அதற்கு உதவுவதற்கு பதிலாக அவர்களே அதை செய்து விடையை அறிய விட்டுவிடுங்கள். அவர்கள் தங்கள் மனதினை அதில் செலுத்தி அந்த கணக்குகளை புரிந்துகொள்ள அனுமதியுங்கள். அதனால் அவர்களுக்கு சாதித்த மன நிறைவும் தன்னம்பிக்கை மற்றும் ஊக்கமும் பிறக்கும்.

காவேரி மருத்துவமனை, மூட்டு மாற்று அறுவை சிகிச்சை மையம்

உள்நாட்டு மற்றும் சர்வதேச நோயாளிகளுக்கு மருத்துவ சேவைகளை வழங்குகிறது. மருத்துவ வல்லுநர்கள், அறுவை சிகிச்சை நிபுணர்கள், மருத்துவ மற்றும் மருத்துவரல்லாத ஊழியர்கள் அடங்கிய மிகவும் திறமையான பலதரப்பட்ட குழு மூலம் பன்முக சிறப்பு மருத்துவ மற்றும் அறுவை சிகிச்சை சேவைகளை வழங்குகிறது.

தொடர்பு கொள்ள: +91-431-4022555 / 4077777

விளம்பர பகுதி

திங்கள், 18 நவ 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon